இதுல அந்த திட்டமே இல்ல.. அப்றம் தோத்துட்டு விதி மேல் பழிய போட்டு வருத்தப்படாதீங்க – அஸ்வின் தேர்வு பற்றி எச்சரித்த இர்பான் பதான்

Irfan Pathan
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பையை வெல்வதற்காக இறுதி கட்டமாக தயாராகி வரும் இந்திய கிரிக்கெட் அணி 2023 ஆசிய கோப்பையை வென்று அடுத்ததாக சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியமாகவும் தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவும் அமைந்தது.

ஆனாலும் அதற்கு ஹர்பஜன் சிங் போன்ற சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் கடைசியாக கடந்த 2022 ஜனவரி மாதம் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் அதன் பின் கடந்த ஒன்றரை வருடங்களாக எவ்விதமான போட்டிகளிலும் விளையாடவில்லை. இருப்பினும் தற்போது அக்சர் படேல் காயமடைந்துள்ள நிலையில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

இர்பான் பதான் எச்சரிக்கை:
அதனால் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பதற்கு ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற கண்ணோட்டத்தில் 700க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளை எடுத்த அனுபவமிக்க ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் என்ன தான் அனுபவிக்க தரமான ஸ்பின்னராக இருந்தாலும் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் விளையாடவில்லை என்று இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.

எனவே திடீரென்று ஆஸ்திரேலிய தொடரில் விளையாட வைத்து உலகக் கோப்பையில் அஸ்வினை தேர்ந்தெடுப்பது சரியான முடிவாக இருக்காது என்றும் இர்ஃபான் பதான் கூறியுள்ளார். குறிப்பாக அஷ்வினை உலகக்கோப்பையில் விளையாட வைக்க எந்த திட்டத்தையும் கடைபிடிக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் கடைசியில் விதியின் மேல் பழியை போடும் வகையில் இந்த முடிவு இருப்பதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விமர்சித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அஷ்வினை விட உங்களுக்கு இந்த உலகில் சிறந்த ஸ்பின்னர் கிடைக்க மாட்டார். ஆனால் உலகக்கோப்பை எப்போதுமே அழுத்தம் நிறைந்த மிகப்பெரிய தொடராகும். அதில் என்ன தான் அனுபவமிக்க சீனியராக இருந்தாலும் நீண்ட காலமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ஒருவரை திடீரென களமிறக்கி திறமையை நிரூபித்துக் காட்ட சொல்கிறீர்கள். எனவே நீங்கள் இதை அனைத்தையும் விதியின் கையில் விடுகிறீர்கள்”

இதையும் படிங்க: உங்க இஷ்டத்துக்கு பிட்ச் தயாரிக்காதீங்க.. பிசிசிஐ’யை அடக்கிய ஐசிசி.. 2023 உ.கோ பிட்ச் தயாரிப்பு பற்றி 3 ரூல்ஸ் வெளியீடு

“ஏனெனில் இந்த முடிவில் எவ்விதமான திட்டமும் இல்லை. ஒருவேளை நீங்கள் அஸ்வினை தேர்ந்தெடுக்க விரும்பினால் அதற்கு முன்பாக அவருக்கு சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும். ஆம் அவர் அடுத்ததாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார். ஆனால் அது மட்டும் போதுமா? நீங்கள் அதற்குள் 10 ஓவர்கள் வீசி அணியின் வெற்றி முடிவையும் கொண்டு வர வேண்டும் என்பது எளிதல்ல. இதற்கான திட்டம் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement