
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நாளை இந்தியாவில் இருந்து துபாய் புறப்படும் என்று கூறப்படுகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த இந்திய அணியில் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு டி20 அணிக்குள் வந்துள்ளார்.
இப்படி டி20 போட்டிகளுக்கு கம்பேக் வாய்ப்பினை பெற்றது மட்டுமின்றி துணை கேப்டனாகவும் சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்கால இந்திய டி20 கேப்டனாகவும் அவர் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக விளையாடுவார் என்பதனால் சஞ்சு சாம்சன் தனது இடத்தை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த பல தொடர்களாகவே அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் துவக்க வீரர்களாக அற்புதமாக விளையாடி வந்த வேளையில் சுப்மன் கில் வருகையால் டாப் ஆர்டரில் சிறிது மாற்றம் இருக்கும் இருந்தாலும் சுப்மன் கில்லின் வருகை இந்திய டி20 அணியை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் இந்திய அணிக்கு கில் பலத்தை சேர்ப்பார் என முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் கில் தான் அபிஷேக் ஷர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்குவார். ஐபிஎல் போட்டிகளில் ஆரம்பத்தில் சற்று பொறுமையாக விளையாடி வந்த அவர் தற்போது 150 ஸ்ட்ரைக் ரேட் வரை விளையாடுகிறார்.
அதுமட்டும் இன்றி ஒவ்வொரு சீசனிலும் 500 முதல் 600 ரன்கள் வரை குவிக்கிறார். அவருடன் அவருடைய பேட்டிங்கில் தற்போது விரைவாக ரன் குவிக்கும் திறமையும் சேர்ந்துள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தும் இந்த திறனால் ஆசிய கோப்பை தொடரிலும் அவர் அசத்துவார் என்று இர்பான் பதான் கூறியது குறிப்பிடப்பட்டது.
இதையும் படிங்க : ஆசியக் கோப்பையில் ரசித் கானை சமாளிக்க.. அவருக்கு பதில் சாம்சனை விளையாட வைங்க.. ஃகைப் அட்வைஸ்
இந்த ஆசிய கோப்பை தொடரின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து துபாய் மைதானத்தில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.