ஆசியக் கோப்பையில் ரசித் கானை சமாளிக்க.. அவருக்கு பதில் சாம்சனை விளையாட வைங்க.. ஃகைப் அட்வைஸ்

Mohammed Kaif
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதனால் அவர் பிளேயிங் லெவெனில் விளையாடுவது இப்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர்வதும் உறுதியாகி விட்டது என்றே சொல்லலாம்.

ஏனெனில் 3வது இடத்தில் திலக் வர்மா தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்த சதங்களை அடித்து சிறப்பாக விளையாடியுள்ளார். 4வது இடத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவ் விளையாடுவார். கடந்த காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடிய சஞ்சு சாம்சன் மிகவும் தடுமாற்றமாக விளையாடினார். இருப்பினும் ஓப்பனிங்கில் களமிறங்கிய பின்பு சிறப்பாக விளையாடிய அவர் 3 சதங்கள் அடித்து முத்திரைப் பதித்தார்.

- Advertisement -

சாம்சன் விளையாடனும்:

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார். தற்போது சுப்மன் கில் ஓப்பனிங்கில் விளையாடுவார் என்பதால் அவர் பெஞ்சில் அமர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆசியக் கோப்பையில் திலக் வர்மாவுக்கு பதிலாக சாம்சானை 3வது இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் முகமது ஃகைப் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு. “ஆசியக் கோப்பையில் அபிஷேக் ஷர்மா – சுப்மன் கில் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள். 3வது இடத்தில் இளம் வீரர் திலக் வர்மா தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். சஞ்சு அனுபவமிக்க பேட்ஸ்மேன். எனவே 3வது இடத்தில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளைக் கொடுத்து வளர்க்கலாம்”

- Advertisement -

ஃகைப் ஆதரவு:

“6 மாதங்கள் கழித்து உலகக் கோப்பை வருகிறது. அதில் விளையாடுவதற்கு சாம்சன் தகுதியானவர். ஐபிஎல் தொடரில் டாப் 10 அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் அவரும் ஒருவராகவும் இருக்கிறார். அதனாலேயே மிடில் ஓவர்களில் ஆப்கானிஸ்தானின் ரசித் கான் போன்ற தரமான பவுலரை மைதானத்துக்கு நேராக சிக்சர்களாக அடிப்பதற்கு சஞ்சுவை விட சிறந்த பேட்ஸ்மேன் இருக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: ஆர்சிபி அணியின் வரலாற்று வெற்றியே.. நெஞ்சை உடைக்கும் துன்பமா மாறிடுச்சு.. விராட் கோலி வேதனை

“தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்வதற்கு கடினமான இடமாகும். அங்கே சாம்சன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக 2 சிக்ஸர்கள் அடித்துள்ளார். வேகம் மற்றும் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளக்கூடிய அவர் ஒவ்வொரு ஐபிஎல் தொடரில் 400 500 ரன்கள் எடுத்துள்ளார். சொல்லப்போனால் 2015இல் அறிமுகமான அவர் 2025 ஆசியக் கோப்பையில் சீனியர் வீரர். 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் அங்கமாக இருந்த அவர் வாய்ப்பு கிடைத்த போது 450 ரன்களை 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி கேரளா லீக் தொடரில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்” என்று கூறினார்

Advertisement