பிரசித் கிருஷ்ணாவையும், அஷ்வினையும் தூக்கிட்டு அந்த 2 பேரை அடுத்த டெஸ்டுக்கு சேருங்க – இர்பான் பதான் கருத்து

Irfan-Pathan
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்ற வேளையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி கேப்டவுன் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க மோசமான பந்துவீச்சே காரணம் என்பதனால் அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்ஃபான் பதான் கூறுகையில் : அடுத்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் அஸ்வின் வெளியேற்றப்பட்டு ஜடேஜா அந்த இடத்தில் விளையாட வேண்டும். ஏனெனில் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய ரவீந்திர ஜடேஜா பின்வரிசையில் ரன் குவிப்பிற்கு கை கொடுப்பார். அதோடு பவுலிங்கிலும் அவரால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும்.

- Advertisement -

மேலும் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக முகேஷ் குமாரை கொண்டு வர வேண்டும். ஏனெனில் பிரசித் கிருஷ்ணா முதல் போட்டியின் போது மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஒருவேளை அவர் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசினால் ரோஹித் அவரை அணியில் நீடிக்க வைக்கலாம்.

இதையும் படிங்க : கோலியும் இல்ல.. யுவ்ராஜூம் இல்ல.. இந்தியாவின் 3 ஆல்டைம் சிறந்த பீல்டர்களை தேர்வு செய்த – வெங்கடேஷ் பிரசாத்

ஆனால் அவர் தொடர்ந்து மைதானத்தின் தன்மையை கணிக்காமல் இருந்தால் நிச்சயம் முகேஷ் குமாரை இரண்டாவது போட்டியில் இணைத்து விளையாட வைக்க வேண்டும் என்று இர்பான் கூறியுள்ளார். ஏற்கனவே இந்திய அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பலரும் பேசி வரும் வேளையில் நிச்சயம் அடுத்த போட்டியில் இரண்டு மாற்றங்களாவது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement