கோலியும் இல்ல.. யுவ்ராஜூம் இல்ல.. இந்தியாவின் 3 ஆல்டைம் சிறந்த பீல்டர்களை தேர்வு செய்த – வெங்கடேஷ் பிரசாத்

Venkatesh-Prasad
- Advertisement -

கிரிக்கெட் போட்டிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து தான் என்றாலும் இந்தியாவின் தேசிய விளையாட்டாக பார்க்கப்படும் அளவிற்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக 2000-ஆம் ஆவது ஆண்டிற்கு பின்னர் இருந்து தற்போது வரை கிரிக்கெட் இந்தியாவில் பெரியளவு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது என்றே கூறலாம்.

அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகள் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பினை பெற்று வரும் வேளையில் சர்வதேச போட்டிகளுக்கு நிகராக தற்போது ஐபிஎல் தொடரும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய வீரர்கள் அனைவரும் ஒரு ஆண்டில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இப்படி கிரிக்கெட் பெரியளவு வளர்ந்துள்ள வேளையில் 90 கால கட்டங்களில் விளையாடிய சில முன்னாள் வீரர்களும் தாங்கள் விளையாடிய காலத்தில் நடந்த அனுபவங்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் என பல்வேறு விடயங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத் சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் யார்? என்ற கேள்விகளை எல்லாம் தாண்டி இந்தியாவின் தலைசிறந்த மூன்று பீல்டர்கள் யார்? என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிலில் : “அசாருதீன்”, “ரெய்னா”, “ஜடேஜா” இவர்கள் தான் ஆல் டைம் 3 சிறந்த பீல்டர்கள் என்று பதிலளிள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன் 1990-ஆம் ஆண்டு கால கட்டங்களில் இந்திய அணிக்கு புதிய ஊக்ககத்தை அளித்து பிட்னஸிற்கு முன்னுதாரணத்தை வழங்கியவர்.

இதையும் படிங்க : ஈஸியா அவுட் பண்ணிருக்கலாம்.. 2வது மேட்ச்லயாவது அதை செய்ங்க.. இந்திய பவுலர்களுக்கு இர்பான் பதான் கோரிக்கை

அதனை தொடர்ந்து தோனி தலைமையில் விளையாடிய ரெய்னா, ஜடேஜா எப்பேர்பட்ட பீல்டர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனாலும் இவர் வெளியிட்ட இந்த பதிலில் தலைசிறந்த ஃபீல்டர்களான யுவ்ராஜ் சிங் மற்றும் விராட் கோலி போன்ற பிட்டான துடிப்பான பீல்டர்களின் பெயர் இடம்பெறாமல் போனது சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.

Advertisement