ஈஸியா அவுட் பண்ணிருக்கலாம்.. 2வது மேட்ச்லயாவது அதை செய்ங்க.. இந்திய பவுலர்களுக்கு இர்பான் பதான் கோரிக்கை

Irfan Pathan
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பையும் நழுவ விட்ட இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்துள்ளது.

மேலும் அந்த தோல்வியால் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ள இந்தியா குறைந்தபட்சம் தோல்வியை தவிர்த்து தொடரை சமன் செய்ய ஜனவரி 4ஆம் தேதி துவங்கும் 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான அதே பிட்ச்சில் தென்னாபிரிக்கா 408 ரன்கள் குவிக்கும் அளவுக்கு பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாக்கூர் போன்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமானார்கள்.

- Advertisement -

ஈஸியா அவுட் பண்ணலாம்:
குறிப்பாக தம்முடைய கடைசி தொடரில் விளையாடும் டீன் எல்கர் மிகவும் எளிதாக சதமடித்து 185 ரன்கள் குவிக்கும் அளவுக்கு இந்தியாவின் பவுலிங் மோசமாக அமைந்தது. இந்நிலையில் டீன் எல்கருக்கு ஆரம்பத்திலேயே ஷார்ட் பிட்ச் பந்துகளை எளிதாக அவுட்டாக்கி விடலாம் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். ஆனால் முதல் போட்டியில் எல்கர் செட்டிலாகி 60 – 70 ரன்கள் குவித்த பின்பே இந்திய பவுலர்கள் ஷார்ட் பந்துகளை வீசியதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே 2வது போட்டியில் ஆரம்பத்திலேயே அவருக்கு எதிராக பவுன்சர் பந்துகளை வீசுங்கள் என்று இந்திய பவுலர்களை கேட்டுக் கொள்ளும் இர்பான் பதான் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியா தங்களுடைய பந்து வீச்சில் கூர்மையாக செயல்படவில்லை. இந்திய பவுலிங் கூட்டணியிடம் அட்டாக் செய்வதற்கும் தடுப்பாட்டம் ஆடுவதற்கும் தகுந்த பேலன்ஸ் இல்லை”

- Advertisement -

“குறிப்பாக எல்கர் நன்றாக செட்டான பின்பும் இந்திய பவுலர்கள் ஒரு நல்ல பந்தில் எப்படியாவது அவுட்டாக்கி விடலாம் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து அட்டாக் செய்து பந்து வீசினார்கள். எல்கர் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் பிரச்சனையை கொண்டுள்ளார். ஆனால் நீங்கள் முதல் போட்டியில் அவர் 60 – 70 ரன்கள் எடுத்த பின்பு தான் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினீர்கள்”

இதையும் படிங்க: இந்திய தொடரில் இருப்பேன்.. ஒன்டே’வில் ஓய்வு பெற்றாலும் 2025இல் விளையாட தயார்.. வார்னர் அறிவிப்பு

“ஆஸ்திரேலியாவில் விளையாடிய போது அவர் 4 முறை ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவுட்டானார் என்பதை நான் வர்ணனையில் தொடர்ந்து சொன்னேன். எனவே 2வது போட்டியிலாவது தொடரை சமன் செய்ய நீங்கள் நன்றாக பந்து வீச வேண்டும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து 2வது போட்டி கேப் டவுன் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement