இந்திய தொடரில் இருப்பேன்.. ஒன்டே’வில் ஓய்வு பெற்றாலும் 2025இல் விளையாட தயார்.. வார்னர் அறிவிப்பு

David Warner
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடருடன் நட்சத்திர ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகளிலும் விடைபெறுவதாக டேவிட் வார்னர் 2024 புத்தாண்டு தினத்தன்று அறிவித்துள்ளார்.

கடந்த 2009இல் அறிமுகமான அவர் மேத்தியூ ஹெய்டன் – ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு பின் தரமான துவக்க வீரரை தேடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் தேடலுக்கு தீர்வாக கிடைத்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் அந்தளவுக்கு அதிரடியாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுக்க துவங்கிய அவர் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 2015 உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

வித்யாச அறிவிப்பு:
இருப்பினும் கடந்த சில வருடங்களாக தடுமாற்றமாக செயல்பட்டு வந்த அவர் காக சந்தித்த விமர்சனங்களுக்கு 2021 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல உதவினார். அதைத்தொடர்ந்து நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையிலும் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வெல்ல உதவிய அவர் தற்போது 37 வயதாவதால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விடை பெற்று அடுத்த தலைமுறைக்கு வழிவிட முடிவெடுத்துள்ளார்.

இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் விளையாட உள்ள அவர் 2024 டி20 உலகக் கோப்பை வரை தொடர்ந்து விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்காக தேவைப்பட்டால் விளையாட தயார் என டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் 2024 டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் வர்ணனையாளராக இருப்பேன் என்றும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்ருமாறு. “அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி வருகிறது என்பதை நான் அறிவேன். ஒருவேளை அடுத்த 2 வருடங்களில் நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடும் பட்சத்தில் தேவைப்பட்டால் ஆஸ்திரேலியாவுக்காக கண்டிப்பாக அத்தொடரில் விளையாடுவதற்கு தயாராக இருப்பேன்”

இதையும் படிங்க: நாம சோக்கர் இல்லப்பா.. ஏதோ ஒரு குறை இருக்கு.. இந்திய ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் பதில்

“அதே போல அடுத்த வரும் பிக்பேஷ் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன். அதற்குப் பின்னே இருக்கும் சர்ச்சைகள் என்னை அதை செய்வதற்கு அனுமதித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள அடுத்த டெஸ்ட் தொடரில் நான் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக இருப்பேன். பிபிஎல் தொடருக்கு பின் ஐஎல்டி20 தொடரில் விளையாட உள்ளேன்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி தம்முடைய சொந்த ஊரான சிட்னியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியுடன் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement