நாம சோக்கர் இல்லப்பா.. ஏதோ ஒரு குறை இருக்கு.. இந்திய ரசிகருக்கு வெங்கடேஷ் பிரசாத் பதில்

Venkatesh Prasad
- Advertisement -

கோலாகலமாக பிறந்துள்ள 2024 புத்தாண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சிறப்பாக விளையாடி புதிய வெற்றிகளை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 2023 காலண்டர் வருடத்தில் ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விட்டு தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று அசத்தியது.

அதன் காரணமாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டின் ஐசிசி தரவரிசையிலும் ஒரே நேரத்தில் முதலிடம் பிடித்த அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. ஆனால் இதை தவிர்த்து முக்கியமான 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பிய இந்தியா 2வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

- Advertisement -

சோக்கர் இல்லப்பா:
அதை விட சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா மீண்டும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சுமாராக விளையாடி கோப்பையை கோட்டை விட்டது. அதன் வாயிலாக 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரின் நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

கடைசியாக 2013இல் எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா அதன் பின் கடந்த 10 வருடங்களாக ஏறத்தாழ அனைத்து ஐசிசி தொடர்களிலும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டாலும் செமி ஃபைனல், ஃபைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. அதனால் தென்னாப்பிரிக்கா சோக்கர் என்றால் இந்தியா நாக் அவுட் போட்டிகளின் சோக்கர் என்று பாகிஸ்தான் போன்ற எதிரணிகளைச் சேர்ந்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

- Advertisement -

அதனால் ஏமாற்றமடைந்த ஒரு இந்திய ரசிகர் “சார் கடந்த 10 வருடங்களில் தொடர்ந்து 10வது முறையாக ஐசிசி நாக் அவுட்டில் தோல்வியை சந்தித்துள்ளதால் நீங்களும் இந்தியா கிரிக்கெட்டின் புதிய சோக்கராக மாறி விட்டார்கள் என்று நினைக்கிறீர்களா” என முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத்திடம் பரிதாபமான கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு வெங்கடேஷ் பிரசாத் ட்விட்டரில் பதிலளித்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: இனிமே நான் கேப்டனா இருக்க மாட்டேன். அதிரடி முடிவை கையிலெடுக்க காத்திருக்கும் தல தோனி – விவரம் இதோ

“சோக்கர் இல்லை. நாம் ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளோம். குறிப்பாக கடைசியாக 2020/21இல் 36க்கு ஆல் அவுட்டான பின் முதன்மை வீரர்கள் இல்லாத போதிலும் வென்றதை நான் இந்தியாவின் மகத்தான வெற்றியாக கருதுகிறேன். ஆனால் கடந்த 11 வருடங்களாக ஐசிசி போன்ற முக்கியமான தொடர்களில் வெற்றி பெறாமல் இருப்பதில் ஏதோ ஒரு விஷயம் சரியாக இல்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement