இனிமே நான் கேப்டனா இருக்க மாட்டேன். அதிரடி முடிவை கையிலெடுக்க காத்திருக்கும் தல தோனி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டி வரை அசத்தலான வெற்றிநடை போட்டு முன்னேறிய சென்னை அணியானது இறுதிப்போட்டியில் குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து நடப்பு சாம்பியனாக இந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பங்கேற்க உள்ளது.

கடந்த மாதம் இறுதியில் துபாயில் நடைபெற்ற வீரர்களுக்கான மினி ஏலத்திலும் பங்கேற்ற சென்னை அணியானது வருங்காலத்தை கணக்கில் கொண்டு அடுத்த தலைமுறைக்கான சில இளம் வீரர்களையும் அணியில் இணைத்தது. மேலும் இந்த ஆண்டு தோனியே கேப்டனாக அணியை வழிநடத்த இருக்கிறார் என்றும் கூறப்பட்டதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி கேப்டன்சியிலிருந்து விலக உள்ளதாக ஒரு தகவல் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் வெளியான இந்த தகவலின் படி தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு செல்லலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் தோனி முழுநேர வீரராக விளையாடாமல் இம்பேக்ட் வீரராக விக்கெட் கீப்பராக மட்டுமே இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது சென்னை அணி முதலில் பீல்டிங் செய்தால் அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவார். அதே வேளையில் பேட்டிங்கின் போது அவரது இடத்தில் இம்பேக் பிளேயராக வேறொரு இளம்வீரர் பேட்டிங் செய்ய அனுப்பப்படுவார்.

- Advertisement -

அதேபோன்று சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் ஒரு பேட்ஸ்மேன் களமிறங்கிய இடத்தில் அவர் இரண்டாவது இன்னிங்ஸின்போது இம்பேக்ட் பிளேயராக விக்கெட் கீப்பராக உள்ளே செல்வார். களத்தில் விக்கெட் கீப்பிங் செய்யும்போது கேப்டனுக்கு உறுதுணையாகவும், அணிக்கு ஆதரவாகவும் தோனி இந்த ஆண்டு முழுவதும் களத்தில் இருந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

இதையும் படிங்க : டெஸ்ட் மட்டுமல்ல ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் – திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

கடந்த ஆண்டு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சற்று சிரமத்தை அனுபவித்த தோனி அதன் காரணமாக அண்மையில் அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டார். அதனாலே பேட்டிங் செய்ய வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இந்த ஆண்டு ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் விளையாடிவிட்டு இந்த தொடரின் முடிவிலேயே தனது ஓய்வையும் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அதோடு தன்னுடைய கிரிக்கெட் கரியரை துவங்கிய காலத்தில் எவ்வாறு நீண்ட முடியுடன் இருந்து ரசிகர்களை கவர்ந்தாரோ அதேபோன்று தற்போது விடைபெறும் நேரத்திலும் அவர் ரசிகர்களுக்காக தனது தலைமுடியையும் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement