சீட்டு காலின்னு இந்தியாவை கலாய்ச்சீங்களே.. இப்போ என்னாச்சு.. மைக்கேல் வாகனுக்கு இர்பான் பதிலடி

Irfan Pathan
- Advertisement -

விறுவிறுப்பான தருணங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பையில் அக்டோபர் 26ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை 2வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக லஹிரு குமாரா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 157 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 77* ரன்களும் சமரவிக்ரமா 65* ரன்களும் எடுத்து 25.4 ஓவரில் மிகவும் எளிதான வெற்றி பெற வைத்ததால் டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளை சாய்த்தும் இங்கிலாந்து தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

பதான் பதிலடி:
அதனால் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 4வது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்துள்ளது. அதன் காரணமாக எஞ்சிய 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றாலும் மோசமான ரன்ரேட்டை கொண்டிருப்பதால் இங்கிலாந்து இந்த உலகக் கோப்பையிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது.

முன்னதாக அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்கிய இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இருப்பினும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அமரக்கூடிய அந்த கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா விளையாடாத காரணத்தால் போட்டி துவங்கிய மதியம் 2 மணியளவில் பெரும்பாலான ரசிகர்கள் வரவில்லை. அதனால் வெறிச்சோடிய மைதானத்தில் அப்போட்டி நடைபெற்றதால் பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் விமர்சித்தார்கள்.

- Advertisement -

அதே போல முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் “இந்த உலகக் கோப்பையில் ரசிகர்கள் மிகவும் குறைவாக வருகிறார்கள். எனவே இலவச டிக்கெட்டுகளை வழங்கி மைதானம் முழுவதுமாக நிரம்பியிருப்பதை உறுதி செய்யுங்கள்” என்று இந்தியாவை அக்டோபர் 7ஆம் தேதி ட்விட்டரில் விமர்சித்திருந்தார். அது போக அக்டோபர் 11ஆம் தேதி டெல்லியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் மதிய நேரத்தில் வெயில் காரணமாக ரசிகர்கள் இல்லாததையும் அவர் கிண்டலடிக்கும் வகையில் விமர்சித்திருந்தார்.

இதையும் படிங்க: கடந்த 27 வருஷத்துல இங்கிலாந்து அணி இப்படி ஒரு நிலையை சந்திச்சது இதுதான் முதல் முறையாம் – சுவாரசிய தகவல் இதோ

இந்நிலையில் இந்திய மைதானங்களில் சீட் காலியாக இருக்கிறது என்று சொன்னீர்களே இப்போது உலகக்கோப்பையில் உங்களுக்கு சீட் இல்லை என்ற வகையில் அவருக்கு இர்பான் பதான் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு. “மைதானத்தில் காலியான இருக்கைகள் இருந்ததற்காக சிலர் கவலையை வெளிப்படுத்தினர். அப்போது அவர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement