கடந்த 27 வருஷத்துல இங்கிலாந்து அணி இப்படி ஒரு நிலையை சந்திச்சது இதுதான் முதல் முறையாம் – சுவாரசிய தகவல் இதோ

ENG
- Advertisement -

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது நடப்பு சாம்பியனாக இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அடியெடுத்து வைத்தது. பலம் வாய்ந்த வீரர்களை தங்களது அணியில் கொண்டுள்ளதால் நிச்சயம் இங்கிலாந்து அணி அரையிறு சுற்றுக்கு தகுதி பெறும் என்று பலராலும் இந்த தொடருக்கு முன்னதாக கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ள ஆட்டங்களின் அடிப்படையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி நான்கு தோல்விகளை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் ஒரு வெற்றியுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

இனிவரும் நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதி வாய்ப்பு என்பது ஒரு எட்டா கனியாகவே பார்க்கப்படும் வேளையில் இன்று அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் மோசமான தோல்வியை சந்தித்தது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் பலம் வாய்ந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட இங்கிலாந்து அணி இன்று இலங்கை அணிக்கு எதிராக 33.2 ஓவர்களிலேயே 156 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின்னர் அதனை எளிதாக துரத்திய இலங்கை அணி 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்படி இங்கிலாந்து அணி அடைந்த மாபெரும் தோல்விக்கு பிறகு உலகக் கோப்பை வரலாற்றில் அவர்கள் ஒரு மாபெரும் பின்னடைவையும் சந்தித்தது மட்டுமின்றி மோசமான சாதனை பட்டியலும் இணைந்துள்ளனர். அந்த வகையில் இலங்கை அணிக்கெதிராக இன்று அவர்கள் பெற்ற தோல்வியோடு சேர்த்து தொடர்ச்சியாக இந்த தொடரில் மூன்று தோல்விகளை பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும், அதன்பிறகு அக்டோபர் 21-ஆம் தேதி தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும், தற்போது அக்டோபர் 26-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தனர். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியானது 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் தான் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது.

இதையும் படிங்க : 21ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஓடவிட்டு மாஸ் காட்டி வரும் இலங்கை.. ஆச்சர்யமான புள்ளிவிவரம்

அதன்பிறகு 27 ஆண்டுகள் கழித்து உலக கோப்பை வரலாற்றில் தற்போது ஹாட்ரிக் தோல்வியை இங்கிலாந்து அணி முதல்முறையாக சந்தித்திருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இங்கிலாந்து அணி மோதவுள்ளதால் இதில் ஏதாவது ஒரு போட்டியில் தோற்றால் கூட அவர்களது அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement