21ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஓடவிட்டு மாஸ் காட்டி வரும் இலங்கை.. ஆச்சர்யமான புள்ளிவிவரம்

SL vs ENG 2
Advertisement

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 26ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை அசால்டாக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 33.2 ஓவரில் 156 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக லகிரு குமாரா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 157 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 77* ரன்களும் சமரவிக்ரமா அதிரடியாக 65* ரன்களும் எடுத்து 25.4 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்ததால் டேவிட் வில்லி 2 விக்கெட்டுகள் எடுத்தும் இங்கிலாந்து தோற்றது.

- Advertisement -

21ஆம் நூற்றாண்டில்:
மறுபுறம் இதுவரை விளையாடி 5 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்து 4 தோல்விகளை சந்தித்துள்ள இங்கிலாந்து புள்ளி பட்டியலில் 9வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதனால் நடப்பு சாம்பியனாக இருக்கும் அந்த அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு 90% முடிந்து போயுள்ளது இங்கிலாந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இத்தனைக்கும் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கி போட்டிகளில் 300 – 400 ரன்கள் எடுக்கும் அணியாக கருதப்படும் இங்கிலாந்து தற்சமயத்தில் இலங்கையை விட மிகவும் வலுவான அணியாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் சிறந்த செயல்பாடுகளால் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்துள்ள இலங்கை உலகக் கோப்பையில் தொடர்ந்து 5வது முறையாக வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஆம் கடைசியாக கடந்த 1999 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

ஆனால் அதன் பின் 2003இல் சந்திக்காத நிலையில் 2007 உலகக்கோப்பையில் ஆன்ட்டிகுவா நகரில் இங்கிலாந்தை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இலங்கை த்ரில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 2011 உலகக் கோப்பையில் கொழும்புவில் தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை 2015 உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதையும் படிங்க: நான் வச்சிருந்த பிளான் எல்லாம் இதுமட்டும் தான். அதை வச்சே இங்கிலாந்தை முடிச்சிட்டேன் – ஆட்டநாயகன் லஹிரு குமாரா பேட்டி

அதை விட 2019 உலகக்கோப்பையில் மலிங்காவின் அதிரடியால் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை தற்போது இந்திய மண்ணிலும் 5வது முறையாக வீழ்த்தியுள்ளது. அந்த வகையில் 21ஆம் நூற்றாண்டில் உலகக்கோப்பையில் இங்கிலாந்தை அசால்டாக ஓடவிட்டு இலங்கை மாஸ் வெற்றிகளை பெற்று வருவது வியப்பான புள்ளி விவரமாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement