
கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப்போட்டியில் இருந்து அரையிறுதி போட்டி வரை தோல்வியையே சந்திக்காமல் வெற்றிநடை போட்ட இந்திய அணி அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்து ஐசிசி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.
அதைதொடர்ந்து தற்போது எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி தொடர் தோல்விகளை பெற்று வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்வி இந்திய அணியை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வெல்லவில்லை என்றால் சீனியர் வீரர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.
அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சமீபகாலமாகவே பேட்டிங் பார்மின்றி தவித்து வருவதால் அவர்கள் இருவரும் மிகப்பெரிய அழுத்தத்திற்கு மத்தியில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவருமே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்துவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அசத்துவார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஒரு கடினமான பார்மெட். அதில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான வீரர்கள்.
இதையும் படிங்க : பேட்டிங்கும் பண்ணல.. பவுலிங்கும் பண்ணல.. 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலிருந்து – நீக்கப்படும் வீரர்
அவர்களுக்கு பிடித்த வடிவிலான போட்டிகளும் ஒருநாள் போட்டிகள் தான் என்று நினைக்கிறேன். அதனால் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர்கள் மீண்டும் தங்களது பேட்டிங் பார்மை மீட்டெடுத்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என இர்ஃபான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.