பேட்டிங்கும் பண்ணல.. பவுலிங்கும் பண்ணல.. 2 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியிலிருந்து – நீக்கப்படும் வீரர்

IND
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியானது ஜனவரி 23-ஆம் தேதியான நேற்று கொல்கத்தா ஈடன் கார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

2 ஆவது போட்டியில் ஏற்படவுள்ள மாற்றம் :

இந்த முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் முதல் டி20 போட்டியின் போது இந்திய அணியில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு திரும்ப அதிக வாய்ப்புள்ளதால் அவருக்கு பதில் அவரது இடத்திற்கு பதிலாக யாரை அணியிலிருந்து நிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பார்க்கையில் முகமது ஷமி இந்திய அணியில் இடம்பெறும் பட்சத்தில் அவருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் ஆல்ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா இருப்பதினால் அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, பாண்டியா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம்பெறுவார்கள்.

இதையும் படிங்க : 22 வயசு பையன் மாதிரி இருக்காரு.. சீறும் முகமது ஷமி குறித்து பிரமித்து பேசிய – அர்ஷ்தீப் சிங்

அதேபோன்று சுழற்பந்து வீச்சினை பொறுத்தவரை அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னாய் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்பதனால் முதல் போட்டியில் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கும் செய்யாத நிதீஷ்குமார் ரெட்டியே நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement