அவர் ஃபார்மில் இல்லாததால்.. டி20 உ.கோ தொடரில் விராட் கோலியை ஓப்பனிங்கில் இறக்கலாம்.. பதான் யோசனை

Irfan Pathan 9
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் விராட் கோலி பல விமர்சனங்கள் மற்றும் விவாதத்திற்கு பின் இந்தியாவுக்காக விளையாட தேர்வானது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி ஃபினிஷிங் செய்யக்கூடிய ஸ்டைலை கொண்டவர். எனவே ஸ்லோவான பிட்ச்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் அந்த அணுகுமுறை எடுபடாது என்பதால் விராட் கோலியை கழற்றி விட வேண்டும் என்ற விமர்சனங்கள் காணப்பட்டன. இருப்பினும் உலகின் அனைத்து மைதானங்களிலும் அசத்திய அனுபவத்தை கொண்ட காரணத்தால் அவர் மீண்டும் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

இர்பான் பதான் ஆலோசனை:
இதைத் தொடர்ந்து வழக்கம் போல அவர் இந்திய அணிக்காக 3வது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் தேர்வாகியுள்ள ஜெய்ஸ்வால் தற்போது சுமாரான ஃபார்மில் இருப்பதாக இர்பான் பதான் கவலை தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக விராட் கோலியை கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறக்கலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது மிகப்பெரிய கவலையை கொடுக்கக்கூடிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனெனில் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் ஜெய்ஸ்வால் உலகக் கோப்பையின் துவக்க போட்டியில் ஓப்பனிங் வீரராக களமிறங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதனால் எதிரணி லெப்ட் ஆர்ம் ஸ்பின்னரை வைத்து போட்டியை துவக்காது”

- Advertisement -

“இருப்பினும் ஜெய்ஸ்வால் நல்ல ஃபார்மில் இருந்தால் அதை செய்வதற்கு எதிரணி கொஞ்சம் தயங்குவார்கள். ஆனால் அவருடைய தற்போது ஃபார்ம் பற்றி இந்திய அணி இருமுறை யோசிக்க வேண்டியுள்ளது. எனவே இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலியை கேப்டன் ரோஹித் சர்மாவுடன் களமிறக்கலாமா அல்லது அனுபவமற்ற இளம் வீரரான ஜெய்ஸ்வாலை பயன்படுத்தலாமா என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்”

இதையும் படிங்க: நடப்பு 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய ரியான் பராக் – விவரம் இதோ

“தற்போதைய நிலைமையில் ஜெய்ஸ்வால் ஃபார்முக்கு வருவது அவசியம். அவருடைய ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே உலகக் கோப்பைக்கு முன்பாக அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நல்ல விஷயமாகும். ஆனால் அவருடைய தற்போதைய ஃபார்ம் ராஜஸ்தான் அணிக்கே பின்னடைவை ஏற்படுத்தும்” என்று கூறினார். இந்த நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் ஜெய்ஸ்வால் 13 போட்டிகளில் 348 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement