நான் மட்டும் இந்தியாவுக்காக அந்த ஃபைனலில் விளையாடிருந்தா.. நிலைமை வேற மாதிரி இருந்துருக்கும்.. ரிஷப் பண்ட்

RIshabh Pant
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்கு 2023 வருடம் மிகவும் ஏமாற்றமானதாகவே அமைந்தது. ஏனெனில் அந்த வருடம் இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறியது. ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் ஃபைனல் வரை சென்ற இந்தியா கடைசியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையைக் கோட்டை விட்டது.

முதலாவதாக லண்டனில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடியில் ஆஸ்திரேலியாவிடம் போராடாமலேயே இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய இந்தியா தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றது. அத்துடன் வரலாற்றி முதல் முறையாக செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா ஃபைனலுக்கு சென்றது.

- Advertisement -

ரிஷப் பண்ட் ஆதங்கம்:
அதனால் 2011 போல கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை சேசிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் சதமடித்த டிராவிஸ் ஹெட் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை நொறுக்கி 5வது கோப்பையை வென்று கொடுத்தார்.

இந்நிலையில் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தாம் இருந்திருந்தால் அதிரடியாக விளையாட முயற்சித்திருப்பேன் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை நான் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் விளையாடியிருந்தால் ஒன்று நாங்கள் 150 – 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியிருப்போம். அல்லது நாங்கள் 300 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற்றிருப்போம்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல அந்த ஃபைனலில் ரோகித் சர்மா 47 (31) ரன்கள் எடுத்ததை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் அதிரடியாக விளையாடவில்லை. மேலும் கடைசி 40 ஓவர்களில் இந்தியா வெறும் 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடக்கூடிய ரிசப் பண்ட் அப்போட்டியில் ஒன்று ரிஸ்க் எடுத்து அதிரடியாக விளையாடியிருப்பார். அல்லது 2019 உலகக் கோப்பை போல முன்னதாகவே அவுட்டாகி சென்றிருப்பார்.

இதையும் படிங்க: தவறான செலக்சன்.. விராட் கோலியின் காலணிக்கு கூட பாபர் அசாம் ஈடாக மாட்டாரு.. டேனிஷ் கனேரியா விமர்சனம்

அத்துடன் எம்எஸ் தோனி தம்முடைய ரோல் மாடல் என்பதால் யாரும் ஒப்பிட வேண்டாம் என்றும் ரிஷப் பண்ட் கேட்டுக் கொண்டார். இது பற்றி அதே பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி பாய் என்னுடைய ரோல் மாடல். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுள்ளேன். உதவி தேவைப்படும் போதெல்லாம் நான் அவரிடம் தான் கேட்பேன். அவர் எப்போதும் உதவி செய்து வழி நடத்த தயாராக இருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement