இலங்கை அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு ரோஹித் செய்த 2 தவறுகளே காரணம் – இர்பான் பதன் சாடல்

Irfan-pathan
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய ஆசியக் கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியனான இந்திய அணி “சூப்பர் 4” சுற்றுக்குள் பலமாக நுழைந்தது. அதன் பிறகு நிச்சயம் “சூப்பர் 4” சுற்றிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழையம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

IND vs SL

- Advertisement -

ஆனால் இந்த “சூப்பர் 4” சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளால் இந்த தொடரில் இருந்தே இந்திய அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நிச்சயம் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் 173 ரன்களை குவித்தும் இந்திய அணி பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டு தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வி இந்திய அணியை இந்த தொடரில் இருந்து வெளியேற்றியது மட்டுமின்றி பெரிய விமர்சனங்களையும் பெற்று தந்தது. அதோடு இந்திய அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள், ரோகித் கேப்டன்சி என பல்வேறு விஷயங்கள் இந்த தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த தோல்வி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Arshdeep-Singh

இது குறித்து அவர் பேசுகையில் : ஆடுகளத்தில் பெரிதாக பனிப்பபொழிவு இல்லை. பனிப்பொழிவு இல்லாத மைதானத்தில் பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான சாதகம் கிடைக்கும். அந்த வகையில் இந்திய அணி அடித்த அந்த ரன்கள் வெற்றிக்கு போதுமானதுதான். ஆனால் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச வில்லை என்றே கூற வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் விழுந்த நான்கு விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினார்கள். வேகப்பந்து வீச்சாளர்களால் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. குறிப்பாக ரோகித் சர்மா இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் திறமை கொண்ட ஷமியை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஷமியை அணியில் சேர்க்காதது மிகப்பெரிய தவறாக மாறியது.

இதையும் படிங்க : அவரை வீட்லயே விட்டுட்டு துபாய் வந்தது மிகப்பெரிய தவறு. டிராவிட் மற்றும் ரோஹித்தை விளாசிய – ரவி சாஸ்திரி

அதேபோன்று இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் தீபக் ஹூடா அணியில் 6ஆவது பவுலராக இருக்கும்போதும் அவருக்கு பந்து வீச வாய்ப்பை வழங்காதது ஒரு தவறு. அதோடு 19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியிருக்க வேண்டும். அவர் வீசியிருந்தால் நிச்சயம் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். இப்படி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு முக்கிய தவறுகளை ரோகித் சர்மா செய்ததாக இர்பான் பதான் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement