அவரை வீட்லயே விட்டுட்டு துபாய் வந்தது மிகப்பெரிய தவறு. டிராவிட் மற்றும் ரோஹித்தை விளாசிய – ரவி சாஸ்திரி

Shastri
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை இந்திய அணி இழந்துவிட்டது. இந்த “சூப்பர் 4” சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இன்று கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஏற்கனவே பெற்ற இரண்டு தோல்விகளின் மூலம் இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெளியேற உள்ளதால் இன்று ஆறுதல் வெற்றியுடன் வெளியேற மட்டுமே வாய்ப்பு உள்ளது.

IND vs SL

லீக் சுற்று போட்டிகளில் அற்புதமாக விளையாடிய இந்திய அணியானது நிச்சயம் இந்த முறையும் ஆசிய கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் “சூப்பர் 4” சுற்றில் இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு தேவையில்லாத தோல்விகளை சந்தித்தது அணித்தேர்வின் மீது பெரிய விமர்சனங்களை கொண்டு வர காரணமாக அமைந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பிறகு பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியின் தேர்வு குறித்த தனது கருத்தினை காட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஐக்கிய அரபு அமீரகங்களில் எப்பொழுதுமே எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும். எனவே சுழற்பந்து வீச்சாளர்களை விட நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து அங்கு விளையாடுவது அவசியம்.

Shami-1

மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆசியக்கோப்பை தொடருக்கு பயணித்தது மிகப்பெரிய தவறு. அதுமட்டுமின்றி முகமது ஷமி டி20 கிரிக்கெட்டில் அற்புதமாக பந்து வீசி வருகிறார். நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆனாலும் அவரை டி20 அணியில் இருந்து அவரை நீக்கி தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகளை வழங்காமல் வந்தது தவறு.

- Advertisement -

ஏனெனில் ஷமி போன்ற வீரரை இந்தியாவில் வீட்டில் அமர வைத்துவிட்டு நீங்கள் வெறும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஒரு பெரிய தொடருக்கு பயணிப்பது மிகப்பெரிய தவறான முடிவு. இந்த விவகாரத்தில் டிராவிட் மற்றும் ரோகித் ஆகியோர் பேசியிருக்க வேண்டும். வெற்றிபெற வேண்டுமெனில் அணி முதலில் சிறப்பாக தயாராக வேண்டும்.

இதையும் படிங்க : கேப்டனாக ரோஹித் சர்மா திணறுவதை மீண்டும் நிரூபிச்சுட்டாரு – இந்தியாவுக்கு ஆறுதலுடன் பாக் வீரர் அதிருப்தி

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களின் தேர்வு சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். துபாய் போன்ற மைதானங்களில் இது போன்று அணியை தேர்வு செய்தால் எப்படி வெற்றி பெற முடியும் என்று ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement