கேப்டனாக ரோஹித் சர்மா திணறுவதை மீண்டும் நிரூபிச்சுட்டாரு – இந்தியாவுக்கு ஆறுதலுடன் பாக் வீரர் அதிருப்தி

Rohith
Advertisement

ஆசிய கோப்பை 2022 தொடரில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் களமிறங்கிய இந்தியா 8வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு பைனலுக்கு கூட செல்லாமல் கடுமையான ஏமாற்றத்தை பரிசளித்துள்ளது. இத்தொடரில் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் மீண்டும் வேலையை காட்டிய இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனல் வாய்ப்பை 99% கோட்டை விட்டது. எஞ்சியிருந்த 1% வாய்ப்பும் நேற்று பாகிஸ்தானிடம் ஆப்கானிஸ்தான் போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் பறிபோனது.

IND vs SL

இத்தனைக்கும் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை தொடர்களிலும் தோல்வியடையாமல் வென்ற இந்தியா பாகிஸ்தான், இலங்கை போன்ற இதர அணிகளை காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட வலுவான அணியாக பார்க்கப்படுகிறது. அதனாலேயே உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கிய போதிலும் தவறான அணி தேர்வு, தேர்வு செய்யப்பட்ட வீரர்களையும் சரியாக பயன்படுத்தாதது போன்ற அம்சங்களால் இந்த தோல்வி கிடைத்துள்ளது. குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது.

- Advertisement -

கேப்டன்ஷிப் அழுத்தம்:
காயமடைந்த ஜடேஜாவுக்கு பதில் தேர்வு செய்யப்பட்ட தீபக் ஹூடாவுக்கு சாஹல், பாண்டியா போன்ற முக்கிய பவுலர்கள் தடுமாறியபோது ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு கொடுக்காதது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். முன்னதாக அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்யக்கூடிய ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றபின் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறுவதற்கு கேப்டன்ஷிப் அழுத்தமே காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமத் ஹபீஸ் தெரிவித்திருந்தார்.

Rohit Sharma Arshdeep Singh

அதனால் கவலையும் குழப்பமும் கொண்ட கேப்டனாக காட்சியளிக்கும் அவரால் இந்த பதவியில் நீண்டகாலம் நீடிக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார். அதையே தெரிவித்த மற்றொரு முன்னாள் வீரர் சோயப் அக்தர் ரோஹித் சர்மா பார்மை இழக்க கேப்டன்ஷிப் அழுத்தமே காரணம் என்று சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது அதை நிரூபிக்கும் வகையில் இலங்கை போட்டியை தவிர்த்து இந்த ஆசிய கோப்பையில் சுமாராக செயல்பட்டதை மீண்டும் சுட்டிக் காட்டும் சோயப் அக்தர் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் அதை விட சுமாராக இருந்ததாக கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக தனது அணி வீரர்களிடம் அவர் கடுமையாக நடந்து கொள்வதாக அதிருப்தி தெரிவித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் வீடியோவில் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா சவுகரியமாக இருப்பதாகத் தெரியவில்லை. களத்தில் அவர் மிகவும் கோபப்பட்டு திட்டுகிறார். பிஷ்னோய்க்கு பதில் இந்தியா அஷ்வினை தேர்வு செய்தது அவர்களது அணியில் நிலையற்ற தன்மையை காட்டுகிறது. விரைவில் டி20 உலகக்கோப்பை நடைபெறும் நிலையில் இந்த தோல்வி இந்தியாவுக்கு கண் விழித்துக் கொள்ள வேண்டிய பாடமாகும்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல பொதுவாக அணி வீரர்கள் தவறு செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதே கேப்டனின் தலையாய பண்பாகும். ஆனால் கேட்ச் விட்டதற்காக அர்ஷிதீப் சிங், சொற்ப ரன்களில் அவுட்டாதற்காக ரிஷப் பண்ட் ஆகியோரிடம் வெளிப்படையாக கோபப்பட்டு ரோகித் சர்மா திட்டிய வீடியோக்கள் வைரலானது. அத்துடன் ஒவ்வொரு போட்டியிலும் தேவையற்ற மாற்றங்கள் நிகழ்த்து இந்திய அணியில் நிலையற்ற பதற்றமான தன்மையை காட்டுவதாக கூறும் சோயப் அக்தர் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக இவை அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன் இந்த தோல்வி இந்தியா டி20 உலகக்கோப்பையில் கொதித்தெழுவதற்கு உதவும் எனவும் கூறியுள்ள அவர் இது பற்றி மேலும் பேசியது வருமாறு. “இந்தியா மோசமாக விளையாடியதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் சுமாராக விளையாடினார்கள். சொல்லப்போனால் ஒவ்வொரு வீழ்ச்சியிலும் ஒரு எழுச்சி இருக்கும். அந்த வகையில் இந்த வீழ்ச்சி இந்தியாவுக்கு உலகக் கோப்பையில் எழுச்சியை கொடுக்கலாம்.

இதையும் படிங்க : PAK vs AFG : விராட் கோலி எப்டி போன உங்களுக்கு என்ன, பாபர் அசாமை திட்டும் பாக் ரசிகர்கள் – என்ன நடந்தது

இந்த தோல்வியால் அவர்கள் மனம் தளராமல் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் முதலில் அவர்கள் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை முடிவு செய்ய வேண்டும். அதேப்போல் ரோகித் சர்மாவும் தனது கேப்டன்ஷிப்பை கூர்மையாக வேண்டியுள்ளது” என்று கூறினார்.

Advertisement