PAK vs AFG : விராட் கோலி எப்டி போன உங்களுக்கு என்ன, பாபர் அசாமை திட்டும் பாக் ரசிகர்கள் – என்ன நடந்தது

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா அணி லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் தோல்வியடைந்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை 99% கோட்டை விட்டது. அந்த எஞ்சிய 1% வாய்ப்பு செப்டம்பர் 7ஆம் தேதியான நேற்று நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தானில் கையில் இருந்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 129/6 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதிகபட்சமாக ஹசரதுல்லா 21 ரன்களும் இப்ராஹிம் ஜாட்ரான் 35 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 130 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முஹம்மது ரிஸ்வான் 20, பக்கார் ஜமான் 5, அஹமத் 30, சடாப் கான் 36 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்தளவுக்கு சிறப்பாக பந்துவீசி ஆப்கானிஸ்தான் மடக்கி பிடித்ததால் இந்தியாவின் பக்கம் அதிர்ஷ்டம் வருகிறதோ என்று குருட்டுத்தனமான நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

- Advertisement -

ஏமாற்றிய பாபர்:
ஆனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்களை இழந்திருந்ததால் இந்திய ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியாக இருந்தாலும் கடைசி ஓவரை வீசிய பரூக்கி யார்க்கர் வீச முயன்று ஃபுல் டாஸ் பந்துகளை போட்டார். அதை சரமாரியாக அடித்த நசீம் ஷா அடுத்தடுத்த சிக்சர்களை பறக்கவிட்டு பாகிஸ்தானுக்கு 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் ஏற்கனவே சூப்பர் 4 சுற்றில் தன்னுடைய முதல் போட்டியில் இந்தியாவை தோற்கடித்திருந்த அந்த அணி இந்த வெற்றியால் செப்டம்பர் 11இல் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மறுபுறம் இந்தியாவின் வெற்றிக்கும் சேர்த்து போராடிய ஆப்கானிஸ்தான் ஏற்கனவே இலங்கையிடம் தோற்ற இருந்த காரணத்தால் இந்த தொடரிலிருந்து வெளியேறியது. அதேபோல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த நடப்பு சாம்பியன் இந்தியாவும் கோப்பையை தக்க வைக்காமல் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு இன்றைய ஆப்கானிஸ்தான் போட்டி முடிந்தவுடன் நாடு திரும்ப தயாராகியுள்ளது.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் வெறும் 130 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் எளிதாக கிடைக்க வேண்டிய வெற்றி போராடி கிடைத்தது. அதுபோக சமீப காலங்களில் அற்புதமாக செயல்பட்டு உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவர் இந்த ஆசிய கோப்பையில் 10, 9, 14, 0 என 4 போட்டிகளில் வெறும் 33 ரன்களை மட்டுமே எடுத்து படுமோசமாக செயல்பட்டு வருவது பாகிஸ்தானுக்கு பின்னடைவை கொடுத்து வருகிறது.

உங்களுக்கு என்ன:
இதே காரணத்தால் டி20 பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் இழந்த அவர் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தை மற்றொரு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முஹம்மது ரிஸ்வான் பிடித்தாலும் பாபர் அசாமின் இந்த செயல்பாடுகளால் அதிர்ச்சியடைந்துள்ள அந்நாட்டு ரசிகர்கள் பரம எதிரியான இந்தியாவின் விராட் கோலி எப்படி போனால் உங்களுக்கு என்ன என்ற வகையில் சமூக வலைதளங்களில் திட்டுகிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் இவருக்கு முன் பல வருடங்களாக அற்புதமாக செயல்பட்டு நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அப்போது “இதுவும் கடந்து போகும் வலிமையுடன் இருங்கள்” என்று கடந்த மாதம் ட்வீட் போட்டு பாபர் அசாம் ஆதரவு தெரிவித்திருந்தார்.

அந்த நிலைமையில் நடைபெற்ற இந்த ஆசிய கோப்பையில் வலை பயிற்சியின் போது தமக்கு ஆதரவு தெரிவித்த பாபர் அசாமுக்கு நேரடியாக கைகொடுத்து விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க : PAK vs AFG : பாக் ரசிகர்களுக்கு அடிஉதை – சூரையாடப்பட்ட ஷார்ஜா மைதானம், பாகிஸ்தான் கண்டனம், 3 வைரல் வீடியோ

அன்றைய நாளில் கை கொடுத்த போது விராட் கோலியும் சுமாரான பார்ம் தற்போது பாபர் அசாமுக்கு கைமாறிவிட்டதாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலகலப்புடன் தெரிவிக்கிறார்கள். அதற்கேற்றார்போல் அதன்பின் பாபர் அசாம் சரிவை சந்தித்தாலும் சரிவிலிருந்து மீண்டெழுந்த விராட் கோலி 35, 59*, 60, 0 என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பார்முக்கு திரும்பி சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளார்.

Advertisement