அதுக்கு கூட தகுதியில்லாத நீங்க பேசலாமா? இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இர்பான் பதான் பதிலடி

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. வருங்கால தரமான வீரர்களை முன்கூட்டியே அடையாளப்படுத்தும் இந்த தொடரில் உதய் சகரன் தலைமையில் விளையாடிய நடப்பு சாம்பியன் இந்தியா லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அதனால் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து இந்தியா 6வது கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தன. அதை விட சீனியர் கிரிக்கெட்டில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவை இந்த ஜூனியர் தொடரில் தோற்கடித்து இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்தது.

- Advertisement -

இர்பான் பதான் பதிலடி:
ஆனால் பெனோனி நகரில் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 254 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 174 ரன்களுக்கு அவுட்டாகி தோல்வியை சந்தித்தது மீண்டும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

கடந்த வருடம் நடந்த 2 ஐசிசி தொடரிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா தற்போது இதையும் சேர்த்து ஹாட்ரிக் தோல்விகளை தயவு செய்து ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த காரணத்தால் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் இந்தியாவை வழக்கம் போல தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக சீனியர் கிரிக்கெட்டில் தான் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறீர்கள் என்று பார்த்தால் ஜூனியர் கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியவில்லையா என்று இந்தியாவை அந்நாட்டு ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள். அதனால் கோபமடைந்த முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் இதே தொடரில் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் சந்தித்து ஃபைனலுக்கு தகுதி பெறாத நீங்கள் இந்தியாவைப் பற்றி பேச தகுதியற்றவர்கள் என்ற வகையில் ட்விட்டரில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 10 ரன்ஸ்.. 8 விக்கெட்.. வலுவாக இருந்த ஆப்கானிஸ்தான் மீண்டும் ஓடவிட்ட இலங்கை அணி – விவரம் இதோ

இது பற்றி அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “அவர்களின் அண்டர்-19 அணி ஃபைனலுக்கு தகுதி பெறாத சூழ்நிலையில் எல்லைக்கு அப்பாற்பட்ட கீபோர்ட் வீரர்கள் நமது இளம் வீரர்களின் தோல்வியால் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த எதிர்மறையான அணுகுமுறை அவர்களின் தேசத்தின் மனநிலை மோசமாக இருப்பதை பிரதிபலிக்கிறது” என்று கூறியுள்ளார். முன்னதாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை சந்தித்த நிலையில் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாதது குறிப்பிடத்தக்கது.

Advertisement