10 ரன்ஸ்.. 8 விக்கெட்.. வலுவாக இருந்த ஆப்கானிஸ்தான் மீண்டும் ஓடவிட்ட இலங்கை அணி – விவரம் இதோ

SL
- Advertisement -

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று வரும் 3 விதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் ஏற்கனவே இலங்கை அணி பதும் நிசாங்காவின் இரட்டை சதத்தால் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்த வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று பல்லகல்லே நகரில் நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்த போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவித்தது. பின்னர் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 142 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தது.

- Advertisement -

ஆனால் அதன் பின்னர் 143-ஆவது ரன்னுக்கு 3-ஆவது விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான் அணி அடுத்த 10 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதாவது 143-153 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து இறுதியில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இலங்கை அணி சார்பாக ஹசரங்கா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையும் படிங்க : இங்க எதுக்கு வந்தமோ அதுக்கு சம்மந்தமான கேள்வியை மட்டும் கேளுங்க.. பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான ஜடேஜாவின் மனைவி

ஏற்கனவே முதல் போட்டியில் பெரிய இலக்காக இருந்தாலும் இறுதிவரை துரத்திச் சென்று சிறப்பான போட்டியை அளித்த ஆப்கானிஸ்தான் அணி இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் கிட்டத்தட்ட இலக்கை நோக்கி முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் அவர்களை முற்றிலுமாக சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement