- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவை இன்னும் 1947க்கு முந்தைய அடிமைன்னு நினைக்கிறிங்களா? ஓவல் க்யூரேட்டரை சாடிய பதான்

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை சமன் செய்யத் தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளர்கள் ஓவல் மைதானத்தின் பிட்ச்சை அருகில் சென்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதை எதிர்த்த ஓவல் மைதானத்தின் பராமரிப்பாளர் லீ போர்ட்டிஸ் 2.5 மீட்டர் தொலைவிலிருந்து பார்க்குமாறு இந்திய பயிற்சியாளர்களிடம் கராராக பேசினார். அதனால் கோபமடைந்த இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரிடம் கையை நீட்டி வாக்குவாதம் செய்தது சர்ச்சையை உண்டாக்கியது. ஆனால் 2023 ஆஷஸ் தொடரில் இதே ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இது 1947 அடிமை காலாமா:

அப்போட்டிக்கு முன் இங்கிலாந்து பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் – லீ போர்ட்டிஸ் ஆகியோர் பிட்ச் மேலே நின்று கொண்டு பேசினார்கள். அந்த புகைப்படத்தை தற்போது தோண்டி எடுத்துள்ள இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா? என்று லீ போர்ட்டிஸை விளாசி வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தினர் இன்னும் இந்தியர்களை 1947க்கு முன்பிருந்தவர்களைப் போல் நினைப்பதாக இர்பான் பதான் சாடியுள்ளார்.

இது பற்றி ட்விட்டர் மற்றும் யூடியூப் பக்கத்தில் அவர் கூறியுள்ளது பின்ருமாறு. “இங்கிலாந்து பயிற்சியாளர் பிட்ச் மேலே சென்று சோதிக்கலாம்? ஆனால் இந்திய பயிற்சியாளர் சோதிக்கக் கூடாதா? நாம் இன்னும் சர்வாதிகார சகாப்தத்தில் சிக்கியுள்ளோமா? இந்த மைதானப் பராமரிப்பாளர் வரலாற்றில் முரட்டுத்தனமான இருந்துள்ளார்”

- Advertisement -

பதான் விமர்சனம்:

“கடந்த காலங்களிலும் அவர் வெளிநாட்டு கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களிடையே மோசமாக நடந்து கொண்டுள்ளார். இது முதல் முறையல்ல. கௌதம் கம்பீரும் நீண்ட காலமாக ஊடகங்களில் வில்லனாக காட்சிப்படுத்தப்பட்டு வருகிறார். இத்தனைக்கும் நாம் இந்தியாவில் வெளிநாட்டு அணிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறோம். நாம் வெளிநாட்டுக்கு செல்லும் போது தேவையான விதிமுறைகளைப் பின்பற்றுகிறோம்”

இதையும் படிங்க: இங்கிலாந்தை சரணடைய வைத்து பஸ்பால் முகப்பை விரிசலடைய வெட்டீங்க.. இந்தியாவை பாராட்டிய கிரேக் சேப்பல்

“ப்ரெண்டன் மெக்கல்லம் மற்றும் இதே மைதான பராமரிப்பாளர் ஓவல் பிட்ச் மேலே சென்று நிற்கும் புகைப்படம் ட்விட்டரில் காணப்படுகிறது. கம்பீரும் 2 நாட்கள் முன்பாகவே பிட்ச்சை பார்ப்பதற்காக சென்றார். அவருக்கு எப்படி நீங்கள் மறுப்பு தெரிவிக்க முடியும்? இங்கிலாந்து பயிற்சியாளருக்கு அனுமதி கிடைத்துள்ளது ஆனால் இந்தியருக்கு கிடைக்கவில்லை. இதை பார்க்கையில் இன்னும் நாம் 1947க்கு அடிமைக் கால சகாப்தத்தில் வாழ்வதாக உணர்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -