இங்கிலாந்தை சரணடைய வைத்து பஸ்பால் முகப்பை விரிசலடைய வெட்டீங்க.. இந்தியாவை பாராட்டிய கிரேக் சேப்பல்

Greg Chappell
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் பரபரப்பாக நடைபெற்று டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியில் 3வது இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாட இந்தியா 0/2 என ஆரம்பத்திலேயே சரிந்தது. அதனால் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு கேப்டன் கில் 103, ராகுல் 90 ரன்கள் அடித்து கை கொடுத்தனர்.

அதே போல வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஜோடி சேர்ந்து இரட்டை சதம் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினர். நேரம் செல்ல செல்ல இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய அந்த ஜோடி சதத்தை நெருங்கியது. அப்போது அவர்களுடைய சதத்தை தடுக்கும் நோக்கத்துடன் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போட்டியை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.

- Advertisement -

இங்கிலாந்தை சரணடைய வைத்த இந்தியா:

ஆனால் அதை இந்திய கேப்டன் கில் ஏற்காததைத் தொடர்ந்து விளையாடிய சுந்தரும் ஜடேஜாவும் சதத்தை அடித்தனர். அப்போது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்த இந்தியா கடைசிப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய தயாராகியுள்ளது. இந்நிலையில் மான்செஸ்டரில் இங்கிலாந்தை சரணடைய வைத்த இந்தியா அவர்களுடைய பஸ்பால் அணுகு முறையில் விரிசலை ஏற்படுத்தியதாக முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் பாராட்டியுள்ளார்.

இது பற்றி இஎஸ்பிஎன் இணையத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “அந்த போட்டி நீடித்த நாடகத்தைக் கொண்டாட வேண்டிய ஒன்று. ஆனால் அது அசிங்கமான வகையில் முடிந்தது. சதத்தை அடிக்க காத்திருந்த இந்திய வீரர்களுக்கு எதிராக இங்கிலாந்து ஃபீல்டர்கள் பவுன்சர்களை குறி வைத்தார்கள். பஸ்பால் சகாப்தத்தின் தென்றலான ஒழுக்கத்தை வர்த்தகம் செய்த ஒரு அணிக்கு அந்தக் கோபம் எரிச்சலூட்டுவதாக அமைந்தது”

- Advertisement -

சேப்பல் பாராட்டு:

“பெரும்பாலும் விரைவாக ஒழுக்க வெற்றிகளைப் பெறும் இங்கிலாந்து இப்போட்டியில் கவனக்குறைவாக உயர்ந்த இடத்தை விட்டுக் கொடுத்தது. இந்திய அணி மான்செஸ்டரில் மீள்தன்மையால் மட்டுமல்ல, இங்கிலாந்தின் முகப்பில் காணக்கூடிய விரிசல்களாலும் உற்சாகப்படுத்தியது. மான்செஸ்டர் போட்டியை டிரா செய்த இந்தியா ஒரு சிலிர்ப்பானத் தப்பிக்கையைக் கற்பனை செய்து வெற்றியும் கண்டது”

இதையும் படிங்க: சாய் சுதர்சனிடம் அந்த டேலன்ட் இருக்கு.. யார் தப்பா சொன்னாலும் நான் ஏத்துக்கமாட்டேன் – கம்பீர் பேட்டி

“ஆனால் துடிப்பு மற்றும் சமநிலையை இழந்த இங்கிலாந்தை அது விரக்தியடைய செய்தது. கேஎல் ராகுல் சதத்தை தவற விட்டார். ஆனால் கில் தொடரில் தன்னுடைய 4வது சதத்தை அடித்தார். அவர்களின் விடாப்பிடியான எதிர்ப்பு, சுந்தர் மற்றும் ஜடேஜாவின் நம்பகமான அமைதியான எதிர்ப்புடன் சேர்ந்து இந்தியாவின் டிராவை உறுதி செய்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் சோர்வடைந்ததாக தெரிந்தனர். அவர்கள் தங்களது மன உறுதியை இழந்ததும் நினைவில் இருக்கும்” என்று கூறினார்.

Advertisement