சாய் சுதர்சனிடம் அந்த டேலன்ட் இருக்கு.. யார் தப்பா சொன்னாலும் நான் ஏத்துக்கமாட்டேன் – கம்பீர் பேட்டி

Gambhir and Sai Sudharsan
- Advertisement -

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியின் போது இந்திய அணி சார்பாக தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த போட்டியில் மூன்றாம் இடத்தில் களமிறங்கிய அவர் முதல் இன்னிங்சில் ரன்கள் எதுவும் எடுக்காமலும், இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த வேளையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.

சாய் சுதர்சனிடம் திறமை இருக்கு : கவுதம் கம்பீர்

ஆனால் அவருக்கு பதிலாக மூன்றாம் இடத்தில் விளையாடிய கருண் நாயர் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக இந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடியிருந்த அவர் வெறும் 21 ரன்கள் சராசரியுடன் 131 ரன்கள் மட்டுமே குவித்தார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியின் போது மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் கம்பேக் கொடுத்திருந்த சாய் சுதர்சன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் 61 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்சில் டக் அவுட்டானார். இருந்தாலும் இந்திய அணி எப்படியோ போராடி அந்த போட்டியை டிரா செய்திருந்தது.

இந்நிலையில் சாய் சுதர்சன் மூன்றாம் இடத்தில் தொடர்ந்து விளையாட வேண்டுமா? அல்லது அந்த இடத்திற்கு மாற்றம் ஏதாவது செய்ய வேண்டுமா? என்பது குறித்த பெரிய விவாதம் தற்போது அனைவரது மத்தியிலும் நடைபெற்று வருகிறது. இவ்வேளையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் சாய் சுதர்சனின் திறமையை ஆதரித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் எப்பொழுதுமே ஒருவரின் தனிப்பட்ட ஸ்கோர் குறித்து யோசித்தது கிடையாது. அணியின் வீரர்களுக்கு இடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைய வேண்டும் என்று மட்டுமே யோசிக்கிறேன். தற்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது அடுத்த கட்டத்தை நோக்கி தயாராகி வருவதால் வீரர்களின் தனிப்பட்ட செயல்பாட்டை விட பார்ட்னர்ஷிப் எவ்வாறு இருக்கிறது? என்பதை மட்டுமே பார்க்க விரும்புகிறேன்.

அந்த வகையில் சாய் சுதர்சன் மற்ற வீரர்களுடன் இணைந்து மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்கிறார். அவரிடம் பெரிய ரன் குவிப்பினை வழங்கும் திறமை இருக்கிறது. அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் டெக்னிக்கையும் அவர் வைத்திருக்கிறார். நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் அடித்த அந்த அரைசதம் மிகச் சிறப்பான ஒன்று. ஒரு சில வீரர்களின் திறமையை ஒரே போட்டியில் முடிவு செய்துவிட முடியாது. தற்போது சாய் சுதர்சனுக்கு 23 வயது தான் ஆகிறது.

இதையும் படிங்க : 4 முக்கிய மாற்றங்கள்.. 5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

தற்போது தான் முதல் முறையாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் விளையாடுகிறார். எனவே நாம் அவரது விடயத்தில் இன்னும் ஆதரவு வழங்க வேண்டும். கடந்த போட்டியில் அவர் அடித்த அரைசதம் அவரது திறமையை வெளிக்காட்டி உள்ளது. நிச்சயம் இந்திய அணிக்காக நீண்டகாலம் பயணிக்கும் திறமையும் அவரிடம் இருப்பதாக கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement