இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
5 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :
அதன்காரணமாக நாளை ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கும் இந்த கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். அதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது அதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று தெரிகிறது.
அந்த வகையில் கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியில் 4 பேர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இந்த நான்கு மாற்றங்கள் நிகழ உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நான்காவது போட்டியின் போது காயம் காரணமாக அவதிப்பட்ட ரிஷப் பண்ட் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக இடம்பெறுவார். அதேபோன்று ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவரை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் குல்தீப் யாதவ் வருவதற்கான வாய்ப்புள்ளது.
மேலும் கடந்த போட்டியில் அறிமுகமான அன்ஷுல் கம்போஜ் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. அதுமட்டும் இன்றி பணிச்சுமை காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த போட்டியில் ஓய்வெடுத்துக் கொள்வார் என்பதனால் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் வருவார் என்று தெரிகிறது.
இந்த நான்கு முக்கிய மாற்றங்களை தவிர்த்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வேறு எந்த மாற்றமும் இருக்காது. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணிதான் விளையாடும். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? மருத்துவக்குழு கூறுவது என்ன? – விவரம் இதோ
1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சாய் சுதர்சன், 4) சுப்மன் கில், 5) துருவ் ஜுரேல், 6) ரவீந்திர ஜடேஜா, 7) வாஷிங்டன் சுந்தர், 8) குல்தீப் யாதவ், 9) அர்ஷ்தீப் சிங், 10) ஆகாஷ் தீப், 11) முகமது சிராஜ்.



