ஜஸ்ப்ரீத் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? மருத்துவக்குழு கூறுவது என்ன? – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரானது ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பணிச்சுமை காரணமாக அவர் இந்த தொடரின் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது. அதுவும் இந்த தொடரின் சூழலுக்கு ஏற்ப அவரை பயன்படுத்துவோம் என்றும் இந்திய அணியின் நிர்வாகம் அறிவித்திருந்தது.

பும்ரா கடைசி போட்டியில் விளையாடுவாரா? : மருத்துவக்குழு அறிக்கை

அதேபோன்று இந்த தொடரின் ஆரம்பத்தில் பும்ராவின் இருப்பு குறித்து பேசியிருந்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீரும் : பும்ரா விடயத்தில் எந்த ஒரு ரிஸ்க் எடுக்கவும் நாங்கள் விரும்பவில்லை என்பதனால் அவர் நிச்சயமாக மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று உறுதி செய்திருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் ஏற்கனவே அவர் 3 போட்டிகளில் விளையாடி விட்டதால் ஐந்தாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. ஆனால் தற்போதைய நிலையில் இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும் வேளையில் ஐந்தாவது போட்டியில் அவர் விளையாட வேண்டியது அவசியம் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகின்றார்.

ஆனால் தற்போது வெளியான மருத்துவக்குழுவின் அறிக்கையின்படி : ஐந்தாவது போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மாற்று வீரரே பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே ஆஸ்திரேலியா தொடரின் போது 5 போட்டிகளிலும் விளையாடியதன் காரணமாகவே அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது.

- Advertisement -

அதனால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாகவே அடுத்த பல மாதங்கள் அவரால் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க முடியாமல் போனது. அதன் காரணமாக சில முக்கிய தொடர்களையும் அவர் தவறவிட்டார். எனவே இந்த தொடரில் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு அடுத்த போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று மருத்துவக்குழு உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : இன்னும் 45 ரன்கள் போதும்.. சுனில் கவாஸ்கரின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – கே.எல் ராகுல்

ஒருவேளை ஐந்தாவது போட்டியில் விளையாடி அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால் முன்னெச்சரிக்கை காரணமாக அவர் ஐந்தாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆகாஷ் தீப் மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் வருவார் என்று தெரிகிறது.

Advertisement