இன்னும் 45 ரன்கள் போதும்.. சுனில் கவாஸ்கரின் மாபெரும் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – கே.எல் ராகுல்

KL Rahul and Gavaskar
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது தற்போது நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கே.எல் ராகுல் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணியை சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும்.

- Advertisement -

இதன்காரணமாக இந்த போட்டியானது இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக மாறியுள்ளது. அதனால் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இரட்டிப்பாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடும் கே.எல் ராகுல் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கரின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

அந்த வகையில் கே.எல் ராகுல் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : நடைபெற்று வரும் இந்த இங்கிலாந்து தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் 511 ரன்களை குவித்துள்ள அவர் மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். இதன் காரணமாக ஐந்தாவது போட்டியிலும் அவர் ரன் குவிப்பில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 45 ரன்களை அவர் குவிக்கும் பட்சத்தில் சுனில் கவாஸ்கரின் முக்கிய சாதனையை முறியடிக்க உள்ளார்.

- Advertisement -

அதாவது இங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக 15 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் கவாஸ்டர் 1152 ரன்களை குவித்துள்ளார். அதேவேளையில் அவருக்கு அடுத்ததாக கே.எல் ராகுல் தற்போது 1108 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்தி வரும் கே.எல் ராகுலுக்கு பி.சி.சி.ஐ வழங்கவுள்ள வெகுமதி – விவரம் இதோ

இவ்வேளையில் அடுத்த போட்டியில் அவர் மேலும் 45 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் சுனில் கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். ஏற்கனவே மிகச்சிறப்பான ஃபார்மில் ரன்களை குவித்து வரும் கே.எல் ராகுல் நிச்சயம் அடுத்த போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்துவார் என்பது உறுதி.

Advertisement