அதுக்கு நேரமிருக்கு.. ஆனா இந்திய அணிக்கு விளையாட மனமில்லையா? முக்கிய வீரரை விளாசிய இர்பான் பதான்

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் இரண்டாவது போட்டியில் வென்ற இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. இருப்பினும் இந்த தொடரில் சுமாராக செயல்பட்டு வரும் பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ஒருவராக பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

எனவே அவரை நீக்கிவிட்டு இசான் கிசானை விளையாட வைப்பதற்காக இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் சொந்த காரணங்களுக்காக கடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து பாதியிலேயே விளையாடிய அவர் ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளில் தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

இந்தியாவுக்கு நேரமில்லையா:
அந்த நிலையில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தற்போது நடைபெற்று வரும் 2024 ரஞ்சிக்கோப்பையில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி தயாராக இருங்கள் என்று பயிற்சியளர் ராகுல் டிராவிட் இரண்டாவது போட்டியின் முடிவில் அவருக்கு அறிவுரை தெரிவித்தார். அதனால் பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஹரியானாவுக்கு எதிராக துவங்கிய போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்கண்டுக்கு இசான் கிசான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதை செய்யாத இசான் கிசான் பரோடாவுக்கு சென்று அங்கு ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோருடன் சேர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் காரணமாக தற்போது இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இசான் கிசான் தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

இந்நிலையில் பயிற்சி எடுக்க தேவையான நேரம் இருக்கும் ஒரு வீரருக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவதற்கு நேரமில்லையா என இஷான் கிசானை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: 2வது போட்டியில் இங்கிலாந்தின் பஸ்பாலுக்கு உண்மையான பாலை காட்டியது அவர் தான்.. அஸ்வின் பாராட்டு

“பயிற்சி எடுப்பதற்கு போதுமான உடல் தகுதியுடன் இருக்கும் ஒருவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாதது பற்றி குழப்பம் ஏற்படுகிறது. இது எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். அந்த வகையில் இந்திய அணியை விட ஐபிஎல் தொடருக்கு இசான் கிசான் முன்னுரிமை கொடுப்பது இதிலிருந்து தெளிவாக தெரிவதாக ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement