சன் ரைசர்ஸ் டீம்ல இனிமே வார்னர் விளையாட வாய்ப்பில்லை – இர்பான் பதான் இப்படி கூற காரணம் என்ன ?

Irfan
- Advertisement -

சன் ரைசர்ஸ் அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வரும் டேவிட் வார்னர் இந்த ஐபிஎல் தொடர் முழுவதிலும் பெரிய சறுக்கலை சந்தித்து வருகிறார். அவரது தலைமையில் 2016ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியிருந்த நிலையில் இந்த ஆண்டு துவக்கம் முதலே சரிவை சந்தித்து வரும் வார்னர் முதலாவதாக கேப்டன் பதவியை தவறவிட்டார். அதன் பின்னர் தற்போது அணியில் இருந்து நீக்கப்படும் அளவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Warner

- Advertisement -

ஏற்கனவே இந்த 14வது ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட அவருக்கு இரண்டாவது பாதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் அவர் பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு போட்டியிலும் அவர் அணியில் இடம்பிடிக்கவில்லை இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக வார்னர் இனி சன்ரைசர்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் டேவிட் வார்னர் குறித்து தற்போது தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Warner

சன் ரைசர்ஸ் அணியில் இனி டேவிட் வார்னர் விளையாடமாட்டார் என்பதற்கான அறிகுறிதான் அவருக்கு நேற்று வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஏனெனில் ஏற்கனவே இந்த சீசனின் துவக்கத்தில் கேப்டனாக இருந்த அவர் தொடர் தோல்விகள் மற்றும் மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக கேப்டன் பதவியை தவறவிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது சிறிது வெளிக்குப் பிறகு அணியில் மீண்டும் இடம்பிடித்தும் நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

Warner

இதன் காரணமாகவே இனி அவர் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று தோன்றுகிறது. மேலும் அது தவிர சன்ரைசர்ஸ் அணி இனிவரும் சீசனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே பிரியம் கார்க், அபிஷேக் சர்மா போன்றவர்களை விளையாட வைத்தது. எனவே என்னை பொறுத்தவரை நிச்சயம் இனி டேவிட் வார்னர் விளையாட வாய்ப்பு இல்லை என்றும் அவர் அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் அணியிலிருந்து கழட்டிவிட படுவார் என்று பதான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கங்குலிக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு காரணமாக ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட – இன்ஜமாம் உல் ஹக்

அவர் கூறியது போலவே நேற்றைய போட்டியில் வார்னருக்கு பதிலாக விளையாடிய ஜேசன் ராய் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்ததன் காரணமாக இனிவரும் போட்டிகளிலும் அவரே சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரராக விளையாடுவார் என்று தெரிகிறது.

Advertisement