கங்குலிக்கு ஏற்பட்ட அதே பாதிப்பு காரணமாக ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட – இன்ஜமாம் உல் ஹக்

Inzamam
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்ஜமாம் உல் ஹக் 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றபோது முக்கிய வீரராக திகழ்ந்தார். 1991ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ள அவர் 120 டெஸ்ட் போட்டிகளிலும் 378 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 11739 ரன்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 8830 ரன்களையும் அவர் குவித்துள்ளார்.

Inzamam

- Advertisement -

2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சார்ந்த பல பொறுப்புகளை தற்போது செய்து வருகிறார். இந்நிலையில் 51 வயதான இன்சமாம் உல் ஹக் திடீரென மாரடைப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக தற்போது உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்த அவர் தற்போது கிரிக்கெட் நிர்வாகம் சார்ந்த பணிகளில் திறம்பட செயல்பட்டு வருகிறார்.

inzamam

இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது என்றும் அவரது உடல்நிலை விரைவில் சீராக மாறும் என்றும் மருத்துவமனை தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் முடிந்து அவர் தற்போது நலமுடன் உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளதால் அவருக்கு உலகளவில் உள்ள முன்னாள் வீரர்கள் பலரும் அவர் உடல் நலம் தேறி வரவேண்டுமென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

inzamam

ஏற்கனவே பிசிசிஐயின் தலைவராக சவுரவ் கங்குலி கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement