அடுத்த 10 வருஷத்திற்கு மும்பை அணியில் இவர் முக்கிய வீரராக இருப்பார் – இளம்வீரரை பாராட்டிய பதான்

Irfan-pathan
Advertisement

ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை மிகச் சிறப்பாக விளையாடி வரும் ஜாம்பவான் அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை 5 முறை கோப்பையை கைப்பற்றி அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சாம்பியன் அணியாக திகழ்கிறது. இப்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய ஆதிக்கத்திற்கு காரணமே பல சிறப்பான வீரர்கள் அந்த அணியில் இணைந்து மிக அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்தியது தான் அதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மும்பை அணிக்காக பல இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

mumbai

தற்போதைய 15-ஆவது நடப்பு ஐபிஎல் தொடரானது மும்பை அணிக்கு இது வரை சிறப்பாக செல்லவில்லை என்றாலும் சில இளம் வீரர்களின் ஆட்டம் அந்த அணியில் மிகவும் அற்புதமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றின் வாய்ப்பினை மும்பை அணி இழந்துவிட்டாலும் அடுத்த ஆண்டில் பலமாக செயல்படுவதற்காக தற்போதே அணியில் உள்ள வீரர்களை கட்டமைத்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டின் பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கி அவர்களின் திறனை வெளிக்கொணர்ந்து வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மும்பை அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் 19 வயது வீரர் ஒருவரை இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

SKY tilak Varma

ஐபிஎல் தொடரில் எப்போதெல்லாம் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களை சார்ந்த அணி மிக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி சறுக்கலை சந்தித்தாலும் திலக் வர்மா போன்ற ஒரு அருமையான இளம் வீரரை கண்டறிந்துள்ளது. 19 வயதே ஆன அவர் தனது முதிர்ச்சியான ஆட்டம் காரணமாக மும்பை அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அவரின் இந்த பங்களிப்பு நிச்சயம் அவருக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

- Advertisement -

இளம் இடதுகை ஆட்டக்காரரான அவரின் மதிப்பு தங்கத்திற்கு நிகரானது. எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்து இடது கை ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள். அந்த வகையில் இயற்கையாகவே அருமையான பேட்டிங் திறன் கொண்ட திலக் வர்மா நிச்சயம் மிகப்பெரும் ஸ்டார் பிளேயராக மும்பை அணிக்காக மாறுவார். அதோடு அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகப்பெரிய வீரராகவும் வலம் வருவார் என இர்பான் பதான் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்த வருஷம் சி.எஸ்.கே டீம் வாங்குன நல்ல பிளேயர்ன்னா அது இவர்தான் – வாசிம் ஜாபர் பாராட்டு

19 வயது மட்டுமே நிரம்பிய திலக் வர்மா கடந்த 2018-19 ஆம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட அவர் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 334 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement