இந்த வருஷம் சி.எஸ்.கே டீம் வாங்குன நல்ல பிளேயர்ன்னா அது இவர்தான் – வாசிம் ஜாபர் பாராட்டு

Jaffer
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது பிளே ஆப் சுற்றினை நோக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருவதன் காரணமாக இந்த ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்பட்டு தற்போது அந்த ஏலத்தில் தேர்வு செய்த வீரர்களை வைத்து அனைத்து அணிகளும் விளையாடி வருகின்றன.

IPL 2022 (2)

அந்த வகையில் பல வீரர்கள் ஒரு அணியை விட்டு வேறொரு அணிக்கு சென்று சிறப்பாக விளையாடி வரும் வேளையில் புதிதாக வாங்கப்பட்ட பல இளம் வீரர்களும் தாங்கள் பங்கு பெற்றுள்ள அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டியும் மிகப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சீனியர் வீரர்களை விட பல இளம் வீரர்கள் தங்களது துணிச்சலான பேட்டிங் மற்றும் சிறப்பான பவுலிங், பீல்டிங் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

theekshana

அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக இந்த மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட சிறந்த வீரர் இவர்தான் என்று ஒரு இளம் வீரர் ஒருவரை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கை காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேஷ் தீக்ஷனாவின் வருகை பிறகு மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் குறைவான விலைக்கு வாங்கப்பட்ட மிகச்சிறந்த வீரராக நான் அவரை பார்க்கிறேன். ஏனெனில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு இருந்தாலும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தர முடிகிறது. குறிப்பாக சென்னை அணிக்காக தற்போது தொடர்ந்து விளையாடி வரும் அவர் பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் கூட சிறப்பாக பந்து வீசுகிறார்.

இதையும் படிங்க : அவரை மாதிரி ஒரு வீரரை விளையாட வைக்காதது தான் மும்பை அணியின் சரிவிற்கு காரணம் – வாட்சன் வெளிப்படை

அதோடு இந்த ஆண்டு சென்னை அணியின் பந்துவீச்சு பலமிழந்து காணப்பட்ட வேளையில் அவரது வருகைக்கு பிறகு தற்போது சற்று பலம் கூடி இருக்கிறது என்று வாசிம் ஜாபர் மகேஷ் தீக்ஷனாவை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement