அவரை மாதிரி ஒரு வீரரை விளையாட வைக்காதது தான் மும்பை அணியின் சரிவிற்கு காரணம் – வாட்சன் வெளிப்படை

Watson-1
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. இதுவரை 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த நடப்பு ஐபிஎல் தொடரிலும் தங்களது பலமான ஆதிக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் 11 போட்டிகளில் அவர்கள் 9 தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர்.

Mumbai Indians MI

- Advertisement -

ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது இனி வரும் போட்டிகளில் சம்பிரதாய போட்டிகளாகவே விளையாட இருப்பதனால் மும்பை அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இப்படி இந்த ஆண்டில் மும்பை அணி மிகப்பெரிய சரிவை சந்திக்க பல காரணங்கள் கூறப்படுகிறது.

அந்த வகையில் மும்பை அணியில் இருந்து முக்கிய வீரர்கள் பலர் வெளியேற்றப்பட்டதும், மெகா ஏலத்தின் போது சரியான வீரர்களை வாங்கி அணியை கட்டமைக்காததும் ஒரு காரணம் என்று பல்வேறு கருத்துக்கள் சமூக வளைதளத்தில் உலா வருகின்றன, அந்த வகையில் மும்பை அணி இந்த ஆண்டு செய்த தவறு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

Tim David MI vs RR

இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை அணி இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே செய்த மாற்றங்கள் மிகப்பெரிய தவறாக முடிந்துள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட்டில் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டிம் டேவிட்டை அவர்கள் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்து அவரை சரியாக உபயோகிக்காதது மும்பை அணியின் சரிவுக்கு காரணமாக நான் பார்க்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் அபாயகரமான வீரரான டிம் டேவிட் போட்டியை எந்த நேரத்திலும் திருப்பக்கூடியவர். அவரை மும்பை அணி முதல் இரண்டு போட்டிகளில் பயன்படுத்தி விட்டு பின்னர் பயன்படுத்தாமல் இருந்தது வருத்தமளிக்கிறது. தற்போது மீண்டும் டிம் டேவிட்டை மும்பை அணியில் பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க : ரெய்னா மாதிரி அடுத்த வருசம் ஜடேஜாவையும் பார்க்க முடியாது – முன்னாள் வீரர் பகீர் தகவல்

நிச்சயம் என்னைப் பொறுத்தவரை அவருக்கு இன்னும் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்திருந்தால் மும்பை அணியின் மேலும் சில வெற்றிகளைப் பெற்றிருக்கும். ஆனால் அவரை சரியாக பயன்படுத்தாமல் விட்டதுதான் மும்பை அணியின் சரிவுக்கு காரணமாக அமைந்தது என வாட்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement