ரெய்னா மாதிரி அடுத்த வருசம் ஜடேஜாவையும் பார்க்க முடியாது – முன்னாள் வீரர் பகீர் தகவல்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் பெரிய அளவில் வெற்றிகளை குவிக்காததால் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. அந்த அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனும் எம்எஸ் தோனி தொடர் தொடங்க ஒருசில நாட்கள் முன்பாக கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜா முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பே 4 தோல்விகளை பதிவு செய்து ஹாட்ரிக் தோல்விகளை பெற்ற முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாபத்தை படைத்தார்.

CSK-1

- Advertisement -

அதைவிட சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரில் கூட ஆல்-ரவுண்டராக மிரட்டிய அவர் கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் தடுமாறியதால் அந்த பொறுப்பே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடம் வழங்கி விட்டார். அதற்குள் சென்னையின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு முக்கால்வாசி பறிபோன நிலையில் தற்போது 11 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள அந்த அணி எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாலும் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜடேஜா விலகல்:
இந்நிலையில் மே 4இல் பெங்களூருவுக்கு எதிரன போட்டியின் போது கேட்ச் பிடிக்க முயன்ற ஜடேஜா கடுமையாக காயமடைந்ததால் டெல்லிக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்கவில்லை. காயம் பெரிய அளவில் இருந்ததன் காரணமாக எஞ்சிய ஐபிஎல் 2022 தொடலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகுவதாக சென்னை அணி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஏற்கனவே தீபக் சஹர், ஆடம் மில்னே போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியது தோல்வியை பரிசளித்த நிலையில் ஜடேஜாவும் விலகியது சென்னைக்கு மீண்டும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Jadeja

ஆனால் இந்த வருடம் பேட்டிங் பவுலிங் என அனைத்திலும் மொத்தமாக சொதப்பிய ஜடேஜாவை காயம் என்ற பெயரில் சென்னை அணி நிர்வாகம் கழற்றி விட்டுள்ளதாக பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் அவரை கடந்த வாரம் வரை பின்தொடர்ந்த அந்த அணி நிர்வாகம் தற்போது பின் தொடர்வதை நிறுத்தியுள்ளதை ரசிகர்கள் காட்டுகின்றனர். இருப்பினும் அவை அனைத்தும் கட்டுக்கதைகள் என்று உணர்த்தும் அளவுக்கு பெங்களூரு போட்டியின் போது அவர் காயமடைந்த உண்மையான புகைப்படங்களை சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலுக்கு பதிவேற்றி வருகின்றனர்.

- Advertisement -

பார்க்க முடியாது:
மேலும் இதுபோன்ற அத்தனை செய்திகளும் உண்மைக்குப் புறம்பானது என்று சென்னை அணி நிர்வாக இயக்குனர் காசி விசுவநாதன் கூறியுள்ளார். அத்துடன் வருங்காலங்களில் கண்டிப்பாக சென்னை அணியில் ஜடேஜா விளையாடுவதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த வருடம் சென்னையில் ஜடேஜாவை பார்ப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவு என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா சந்தேகம் தெரிவித்துள்ளார்.

Aakash Chopra

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜடேஜா மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் இருக்க மாட்டார். ஆனால் அடுத்த வருடம் மொத்தமாக சென்னை அணியிலேயே அவர் இருக்க மாட்டார் என்ற உணர்வும் எனக்கு தோன்றுகிறது. இதற்கு முன் சென்னை அணிக்குள் இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளது. குறிப்பாக ஒரு வீரர் காயமடைகிறாரா அல்லது நீக்கப்படுகிறாரா என்று தெளிவாக நமக்குத் தெரிவதில்லை.

- Advertisement -

2021இல் சுரேஷ் ரெய்னாவுக்கும் இதேபோன்ற நிலைதான் ஏற்பட்டது. ஒரு சில போட்டிகளுக்கு பின் திடீரென அவர் நீக்கப்பட்டார். தற்போது கணக்குகளின் அடிப்படையில் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முதலில் அனைத்துப் போட்டிகளிலும் வெல்வது முக்கியம். அதிலும் மும்பைக்கு எதிராக அவர்கள் விளையாடும் போதெல்லாம் அந்த போட்டிகள் மிகவும் கடினமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்” என்று கூறினார்.

Jadeja-1

நன்றியில்லா சென்னை:
அவர் கூறுவது போல கடந்த 2008 முதல் ஒவ்வொரு சீசனிலும் ரன் மழை பொழிந்து பல சாதனைகள் படைத்து வல்லுநர்களால் மிஸ்டர் ஐபிஎல் என பாராட்டப்பட்ட சுரேஷ் ரெய்னா சென்னையின் பல சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றியதால் அந்த அணி ரசிகர்கள் அவரை சின்னத்தல என்று கொண்டாடினார்கள். ஆனால் 2021இல் முதல் முறையாக பெரிய அளவில் ரன்கள் குவிக்க தவறினார் என்பதற்காக தக்க வைக்காத அந்த அணி நிர்வாகம் ஏலத்திலும் வாங்காமல் கழற்றி விட்டது ரசிகர்களை கோபமடைய வைத்தது.

இதையும் படிங்க : இந்த ஒரு விஷயத்துல ஜடேஜாவிற்கு மாற்று யாருமே கிடையாது – டாஸிற்கு பிறகு பாசமழை பொழிந்த தல தோனி

மேலும் 2021இல் இதேபோல 12 போட்டிகளில் விளையாடிய ரெய்னா அதன்பின் காயத்தால் விலகினார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் மொத்தமாக அவருக்கு சென்னை அணி நிர்வாகம் டாட்டா காண்பித்து நன்றியில்லாமல் நடந்து கொண்டது. அந்த வகையில் தற்போது ரவீந்திர ஜடேஜாவுக்கும் அது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளதால் அடுத்த வருடம் அவர் சென்னைக்காக விளையாடுவதை பார்ப்பது சந்தேகமே என்று ஆகாஷ் சோப்ரா வெளிப்படையாக பேசியுள்ளார்.

Advertisement