இந்த ஒரு விஷயத்துல ஜடேஜாவிற்கு மாற்று யாருமே கிடையாது – டாஸிற்கு பிறகு பாசமழை பொழிந்த தல தோனி

dhoni 1
Advertisement

ஐபிஎல் தொடரின் 59 லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடி முடித்துள்ள சென்னை அணியானது :

CskvsMi

20 ஓவர்களை கூட முழுமையாக பேட்டிங் செய்ய முடியாமல் 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் காரணமாக தற்போது 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது. அதனால் இப்போதே மும்பை அணியின் வெற்றி உறுதி என்று கூறலாம்.

- Advertisement -

மும்பை அணி பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய சரிவை சந்தித்தது. தோனி மட்டும் ஒருபுறம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 36 ரன்கள் குவிக்க அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் சென்னை அணி இந்த சரிவினை சந்தித்திருந்தது.

Jadeja

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியில் இருந்து வெளியேறிய ஜடேஜா இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்தே வெளியேறி உள்ளார். இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் போது டாஸிற்கு பிறகு பேசிய தோனி ஜடேஜா குறித்தும் சில விடயங்களை பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஜடேஜா குறித்து தோனி பேசியதாவது : நாங்கள் முதலில் பேட்டிங் செய்வது எங்களுக்கு நிறைய பலனை அளித்துள்ளது. நாங்கள் எந்த வீரரையும் மாற்றாமல் அதே அணியுடன் விளையாடுகிறோம். ஆனால் ஜடேஜா போன்று ஒரு வீரர் அணியில் இருப்பது மிகப் பெரிய பலத்தை நமக்கு தரும். காயம் காரணமாக அவர் விளையாடாதது மிகப்பெரிய இழப்புதான். அவரது இடத்திற்கு மாற்று வீரரை கொண்டுவருவது கடினம்.

இதையும் படிங்க : பிறந்தநாள் அன்று கைரன் பொல்லார்டை ஏமாற்றிய ரோஹித் சர்மா – இப்படியா பண்ணுவீங்க?

அதிலும் குறிப்பாக ஜடேஜாவின் பீல்டிங் போல் யாருடைய பீல்டிங்கும் இருக்காது. அந்த ஒரு விஷயத்தில் அவருக்கு மாற்று வீரர் என்பதே கிடையாது. இருப்பினும் இது போன்ற கடினமான சூழ்நிலையில் நாம் கடந்து போய் தான் ஆகவேண்டும் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement