பிறந்தநாள் அன்று கைரன் பொல்லார்டை ஏமாற்றிய ரோஹித் சர்மா – இப்படியா பண்ணுவீங்க?

Pollard
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் போட்டிகள் தற்போது பிளே ஆப் சுற்றினை நெருங்கி வரும் வேளையில் ஜாம்பவான் அணிகளான சென்னை மற்றும் மும்பை அணி கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்து விட்டது என்றே கூறவேண்டும். இருப்பினும் இவ்விரு அணிகளுக்கும் இடையே எப்போது போட்டி நடைபெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும். அந்த வகையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும் ரோஹித் தலைமையிலான மும்பை அணியும் மோதி வருகின்றன.

CskvsMi

- Advertisement -

இந்தப் போட்டிக்கு முன்னர் வரை சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளையும், மும்பை அணி 11 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதன் காரணமாக இவ்விரு அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டது என்றே கூறலாம். இருந்தாலும் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியிருந்தது. அதன்காரணமாக மும்பை அணி சென்னை அணியை பழிதீர்க்க காத்திருக்கிறது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

Pollard Mi

அதன்படி தற்போது முதல் இன்னிங்சை விளையாடி முடித்துள்ள சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை கூட விளையாட முடியாமல் 16-வது ஓவரிலேயே 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தோனி அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதை தொடர்ந்து 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பை அணிக்கான பிளேயிங் லெவனில் பொல்லார்டு சேர்க்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியை எழுப்பியது. மேலும் அனுபவ வீரரான பொல்லார்டு இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டது சரிதானா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : இனிமே இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் இலவசமாக இந்த சேனலில் பார்க்கலாம் – விவரம் இதோ

அதிலும் இன்று தனது முப்பத்தி ஐந்தாவது பிறந்தநாள் காணும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காதது மிகப்பெரும் ஏமாற்றம் தான். அவரது பிறந்தநாள் அன்று இப்படியா பண்ணுவீங்க ரோஹித் என்று ரசிகர்களும் சில கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement