இனிமே இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் இலவசமாக இந்த சேனலில் பார்க்கலாம் – விவரம் இதோ

Indian-Fans
- Advertisement -

கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்து வந்த இந்திய நாட்டில் கடந்த 1983இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பையில் வலுவான கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்த கபில்தேவ் தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றதும் மக்களின் மொத்த கவனமும் கிரிக்கெட்டின் பக்கம் திரும்பியது. அப்போது முதல் கபில்தேவ், ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களால் மிகவும் புகழ் பெறத் தொடங்கிய கிரிக்கெட்டை அந்த காலத்தில் தற்போது உள்ளது போல் அனைவராலும் தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்க முடியாததாக இருந்தது.

அதுவும் 80, 90களில் கிரிக்கெட் போட்டிகள் பற்றிய ஸ்கோர் மற்றும் முழு விவரங்களை அந்தப் போட்டி முடிந்து அடுத்த நாள் காலையில் வானொலியில் அறிவிக்கப்படும் செய்திகள் வாயிலாகவும் செய்தித்தாள்கள் வாயிலாக மட்டுமே ரசிகர்கள் அறிந்து வந்தனர். நாளடைவில் ரசிகர்களுக்காகவே அகில இந்திய வானொலியில் நேரலையாக குரல் வடிவில் மட்டும் செய்யப்பட்ட வர்ணனை வாயிலாக போட்டிகளை பற்றிய ஸ்கோர்களை ரசிகர்கள் தெரிந்து கொண்டனர். அதிலும் ஒரு ரேடியோவை சுற்றி பல ரசிகர்கள் நின்ற காலம் எல்லாம் மறக்க முடியாதது.

- Advertisement -

டிடி ஸ்போர்ட்ஸ்:
அதை தொடர்ந்து நவீன உலகில் இன்றியமையாத ஒன்றாக உருவெடுத்த தொலைக்காட்சி வந்தபின் இந்தியாவிலேயே முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்ட தொலைக்காட்சி சேனலான டிடி நேஷனலில் முதல் முறையாக இந்தியா பங்கேற்கும் ஒருசில கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டது. அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் பஞ்சாயத்து டிவியின் வாயிலாக மொத்த ஊரும் ஒன்று சேர்ந்து கிரிக்கெட்டை பார்த்ததை எல்லாம் எப்போதுமே மறக்க முடியாது. ஆனால் அதன்பின் பல தனியார் நிறுவனங்களின் வருகையாலும் கிரிக்கெட்டில் பணத்தில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணங்களாலும் ஒரு கட்டத்தில் இந்திய அரசாங்க சேனலான டிடி சேனலில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு குறைத்துக் கொள்ளப்பட்டது.

ஈஎஸ்பிஎன் ஸ்டார் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ், நியோ ஸ்போர்ட்ஸ் போன்ற பல தனியார் நிறுவனங்கள் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை வாங்கி பல கோடி ரூபாய்கள் சம்பாதிக்க தொடங்கின. அதில் பலகோடி ரூபாய்களை பார்த்த அந்த நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் டிடி சேனலில் ஒளிபரப்பு செய்வதற்கு கோர்ட் வரை சென்று தடை வாங்கிய போதிலும் அரசாங்கத்தின் தலையிட்டால் இந்தியா பங்கேற்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மட்டுமே சமீப காலங்களாக டிடி சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளையும் சில சமயங்களில் வெளிநாடுகளில் நடைபெறும் ஒருநாள், டி20 போட்டிகளையும் டிடி சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை.

- Advertisement -

மீண்டும் வருகிறது டிடி:
அதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அல்லது சோனி டென் போன்ற தனியார் சேனல்களுக்கு தனியாக பணம் செலுத்தி பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால் நிறைய பாமர ஏழை கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா பங்கேற்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் பார்க்க முடியாமல் மீண்டும் மொபைலில் கிடைக்கும் ஸ்கோர், செய்தித்தாள்கள், தொலைக்காட்சியில் அறிவிக்கப்படும் செய்திகள் என்பவற்றை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது இதற்கு முடிவு கட்டும் வகையில் இந்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இனி வரும் காலங்களில் இந்தியா பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகளையும் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என அறிவித்துள்ளது. சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் என எங்கு இந்தியா விளையாடினாலும் அது டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் இனிமேல் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகளிர் இந்திய அணியினர் பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகள் கூட எங்கு நடைபெற்றாலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

90ஸ் ரசிகர்கள் ஹேப்பி:
இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள டிடிஹெச் டிஷ் சேவையில் இந்த ஒளிபரப்பு இலவசமாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இது போன்ற அறிவிப்புகள் வெளியான போதிலும் தனியார் டிஷ் மற்றும் கேபிள் ஆபரேட்டர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற தனியார் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக டிடி சேனலை ப்ளாக் செய்தனர்.

இதையும் படிங்க : ஜடேஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு. சி.எஸ்.கே நிர்வாகத்தின் செயலால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் – நடந்தது என்ன?

ஆனால் இம்முறை அது போன்று செய்யக்கூடாது என உச்சநீதிமன்றமும் இந்த அறிவிப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே அந்த காலத்தில் டிடி நேஷனல் சேனலில் கிரிக்கெட் போட்டிகளை கண்ட 90ஸ் கிட்ஸ் இந்திய ரசிகர்கள் மீண்டும் அதேபோல இந்தியாவின் போட்டிகளை கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement