ஜடேஜாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு. சி.எஸ்.கே நிர்வாகத்தின் செயலால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் – நடந்தது என்ன?

Jadeja
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது ஆரம்பத்ததில் இருந்தே சென்னை அணி குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி நாள்தோறும் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதில் சில விமர்சனங்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டேதான் இருக்கிறது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

CSK vs SRH

- Advertisement -

ஆனால் ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணி முதல் 8 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றது. அதன்காரணமாக அவரோடு அவருடைய கேப்டன்சியோடு சேர்த்து அவரது தனிப்பட்ட பார்ம்மும் பெரிதளவு கேள்விக்குறியானது. இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா வெறும் 116 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

அதோடு பந்து வீச்சிலும் 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக தற்போது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய ஜடேஜா காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். ஜடேஜா இப்படி அழுத்தத்தின் காரணமாக வெளியேறியதால் புதிய கேப்டனாக தோனி மீண்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார்.

Jadeja

இந்நிலையில் காயம் காரணமாக வெளியேறிய போதே சி.எஸ்.கே அணிக்கும் அவருக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு இருந்ததாக பேசப்பட்டது. இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது சிஎஸ்கே அணி இன்ஸ்டாகிராமில் ஜடேஜாவை தொடர்வதை நிறுத்தியுள்ளது.

- Advertisement -

மேலும் ஜடேஜாவிற்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே உள்ள மனக்கசப்பினால் தான் இந்த விடயம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜடேஜா கேப்டன்சி செய்யும்போது சுதந்திரம் கொடுக்கப்படாமல் பதவியும் பறிக்கப்பட்டது என்று பேசப்பட்டு வரும் வேளையில் அந்த மனக்கசப்பு காரணமாகவே தற்போது ஜடேஜாவை பின்தொடர்வதை சிஎஸ்கே அணி நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தோனி செய்த அந்த மிகப்பெரிய தவறால் தான் இன்னைக்கு சிஎஸ்கே மோசமான நிலையில் உள்ளது – முகமது கைப்

இதன் காரணமாக தற்போது சென்னை நிர்வாகத்திற்கும், ஜடேஜாவிற்கும் இடையே மனக்கசப்பு உள்ளது உண்மையாகி உள்ளதாக ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement