50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 4 அணிகள் இதுதான். இர்பான் பதான் கணிப்பு – விவரம் இதோ

Irfan-Pathan
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டதை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

அதோடு இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெறப்போகும் அணிகள் எது என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் இந்த உலகக் கோப்பை தொடரினை வெல்ல வாய்ப்புள்ள நான்கு அணிகள் குறித்த தனது கணிப்பினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் இந்த உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக குறிப்பிட்டு உங்களது கருத்து என்ன? என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்திருந்த வேளையில் இர்ஃபான் பதான் மட்டும் தென்னாப்பிரிக்க அணியை தேர்வு செய்துள்ளது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதோடு இந்தியாவில் இம்முறை உலகக் கோப்பை தொடரானது முற்றிலுமாக நடைபெற இருப்பதால் இந்திய அணிக்கு முதன்மையான வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐசிசி உலக கோப்பை 2023 : லட்சிய கனவை இந்திய மண்ணில் சாதிக்குமா.. தென்னாப்ரிக்க அணியின் முழுமையான அலசல்

இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement