துபே, ரிங்குவுடன்.. 2024 டி20 உலகக் கோப்பைக்கான தனது 15 பேர் இந்திய அணியை.. வெளியிட்ட இர்பான் பதான்

Irfan Pathan 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. உலக டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற உள்ள அந்தத் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது. அதில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்தலாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்காக மிடில் ஆர்டரில் அற்புதமாக விளையாடி வரும் சிவம் துபே கண்டிப்பாக இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்று யுவராஜ் சிங், சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் கேட்டுக்கொண்டனர். மேலும் ஃபார்முக்கு திரும்பியுள்ள ஜெய்ஸ்வால், ரியான் பராக், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென சில முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

பதான் அணி:
இந்நிலையில் 2024 20 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றி காண்பதற்கு தேவையான தன்னுடைய 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் மற்றொரு துவக்க வீரராக சமீபத்திய மும்பை போட்டியில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய ஜெய்ஸ்வால் தேர்வாகியுள்ளார்.

அதைத்தொடர்ந்து 3, 4வது இடங்களில் விராட் கோலி, உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவை தேர்ந்தெடுத்துள்ள பதான் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுத்துள்ளார். லோயர் மிடில் ஆர்டரில் சிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோரை ஃபினிஷராக தேர்ந்தெடுத்துள்ள அவர் மும்பை அணியில் தொடர்ச்சியாக பந்து வீசும் காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவையும் தனது அணியில் இணைத்துள்ளார்.

- Advertisement -

அதன் பின் ரவிந்தர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை பதான் முதன்மை ஸ்பின்னர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சு துறையில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷிதீப் சிங் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ள பதான் பேக்-அப் ஸ்பின்னர்களாக சஹால் மற்றும் ரவி பிஸ்னோயை தனது அணியில் சேர்த்துள்ளார். அத்துடன் சுப்மன் கில், சஞ்சு சாம்சனையும் ஆகியோரையும் அவர் பேக்-அப் வீரர்களாக தேர்வு செய்துள்ளார்.

இதையும் படிங்க: இப்போ கசக்கும்.. அதை கண்டுபிடிச்ச அப்றம் எங்க ஆட்டத்தை பாருங்க.. சிஎஸ்கே தோல்வி பற்றி பிளெமிங்

இர்பான் பதான் தேர்ந்தெடுத்துள்ள இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), ரிங்கு சிங், ஹர்டிக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால்/ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷிதீப் சிங், சுப்மன் கில்/சஞ்சு சாம்சன்

Advertisement