இப்போ கசக்கும்.. அதை கண்டுபிடிச்ச அப்றம் எங்க ஆட்டத்தை பாருங்க.. சிஎஸ்கே தோல்வி பற்றி பிளெமிங்

Stephen Fleming 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி வரும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து தடுமாறி வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 23ஆம் தேதி லக்னோவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சென்னை தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் முதல் முறையாக தோற்றது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108*, சிவம் துபே 66 ரன்கள் எடுத்த உதவியுடன் 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய லக்னோவுக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் 124* ரன்கள் விளாசி கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தார். அதனால் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்கு கீழே சரிந்துள்ள சென்னை பின்னடைவை சந்தித்துள்ளது.

- Advertisement -

சோதனை முயற்சி:
முன்னதாக டேவோன் கான்வே காயமடைந்ததால் ஓப்பனிங்கில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா முதலிரண்டு போட்டிகளை தவிர்த்து பெரிய ரன்கள் அடிக்கவில்லை. அதனால் ஏற்கனவே சுமாராக விளையாடியதால் நீக்கப்பட்ட டேரில் மிட்சேல் இப்போட்டியில் மீண்டும் தேர்வாகி 11 (10) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். அதே போல 3வது இடத்தில் விளையாடி வந்த ரகானே ஓப்பனிங்கில் களமிறங்கி ஏமாற்றத்தை கொடுத்தார்.

மேலும் 6, 7வது இடத்தில் விளையாடி வந்த ஜடேஜா 4வது இடத்தில் களமிறங்கி மெதுவாக விளையாடி பின்னடைவை கொடுத்து வருகிறார். அப்படி இந்த வருடம் பேட்டிங் வரிசையில் நிலைத்தன்மை இல்லாதது சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்சமயத்தில் சென்னை அணியில் சரியான கலவையை கண்டறிவதற்கான சோதனையை நடத்துவதால் இது போன்ற கசப்பான தோல்விகள் கிடைப்பதாக பயிற்சியளர் ஸ்டீபன் பிளம்பிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே அதை சரியாக கண்டறிந்து விட்டால் இதே வீரர்கள் ஐபிஎல் தொடரின் 2வது பகுதியில் அபாரமாக விளையாடி வெற்றியில் பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது ஃபார்ம் மற்றும் காம்பினேஷனை கண்டறியும் முயற்சியின் கலவையாகும். சில பகுதிகளில் நாங்கள் சற்று அசௌகரியமாக உள்ளோம். அதற்காக விரைவான தீர்வை கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. ஆனால் 2வது பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் வீரர்களுக்கான கலவையை நாங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்”

இதையும் படிங்க: தோனி என்னிடம் சொன்ன மந்திரம் தான்.. சிஎஸ்கே’வை வீழ்த்த ஹெல்ப் பண்ணுச்சு.. ஸ்டோய்னிஸ் பேட்டி

“டேரில் மிட்சேல் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கீழ் வரிசை பொருந்தவில்லை என்பதால் சர்வதேச அளவில் அசத்திய அவரை மேல் வரிசையில் இறக்கினோம். இதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் டாப் 3 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும். இன்று அதை செய்த ருதுராஜ் தொடர்வார் என்று நம்புகிறேன். நாங்கள் அனைத்து சிலிண்டர்களையும் கொளுத்த விரும்பவில்லை. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் எங்களை வீழ்த்த எதிரணிகளை சிறப்பாக விளையாடுமாறு கேட்கிறோம். அதற்கு நாங்களும் கொஞ்சம் நன்றாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement