தோனி என்னிடம் சொன்ன மந்திரம் தான்.. சிஎஸ்கே’வை வீழ்த்த ஹெல்ப் பண்ணுச்சு.. ஸ்டோய்னிஸ் பேட்டி

Marcus Stoinis 3
- Advertisement -

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் சென்னை 211 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 108*, சிவம் துபே 66 ரன்கள் எடுத்தனர்.

அதை சேசிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் 16, குவிண்டன் டீ காக் 0, படிக்கல் 13 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 13 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 124* ரன்கள் குவித்து லக்னோவை கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தோனியின் மந்திரம்:
அதனால் இந்த சீசனில் 2வது முறையாக சென்னையை தோற்கடித்த லக்னோ புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. அத்துடன் சேப்பாக்கத்தில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாகவும் லக்னோ சாதனை படைத்தது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற மாபெரும் சாதனையை ஸ்டோய்னிஸ் படைத்தார்.

அது போக சென்னை அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் பெரிய போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மற்ற வீரர்களை விட நீங்கள் ஏதேனும் வித்தியாசமாக எக்ஸ்ட்ராவாக செய்ய வேண்டும் என்று தோனி தம்மிடம் கூறியதாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அது இப்போட்டியில் சென்னையை தோற்கடிக்க தமக்கு உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி லக்னோ அணி வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோவில் பேசியுள்ளது பின்வருமாறு. “எம்.எஸ். தோனி இந்த ஒரு விஷயத்தை என்னிடம் கூறியுள்ளார். அதாவது பெரிய போட்டிகளில் தாம் எக்ஸ்ட்ராவாக ஏதாவது செய்ய வேண்டுமென்று எல்லோரும் நினைக்கிறார்கள் என்று அவர் கூறினார்”

இதையும் படிங்க: தோனி, ரெய்னா போன்ற அந்த ஜாம்பவான்களையும் மிஞ்சும் துபே.. சிஎஸ்கே அணிக்காக சரவெடி சாதனை

“அந்த மந்திரத்துடன் தனக்குள் பேசும் அவர் அங்கேயே அசையாமல் நிற்கிறார். அப்படி நிற்கும் போது மற்றவர்கள் மாறுவார்கள் என்று அவர் கூறினார். அந்த வகையில் நான் மட்டும் இங்கே மாறாமல் நிற்பேன் என்று கூறும் போது அவர் மற்ற அனைவரையும் விட ஒரு படி முன்னே இருக்கிறார்” என்று கூறினார். அதாவது அழுத்தமான பெரிய போட்டியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் சமயத்தில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் நின்றால் எதிரணிகள் தடுமாறி தவறு செய்வார்கள் என்று தோனி தம்மிடம் கூறியதாக ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement