- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தகுதியில்லாத ரோஹித் சர்மாவுக்கு.. ஆஸியில் வேறு வழியின்றி சப்போர்ட் பண்ணோம்.. இர்பான் பதான் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா டெஸ்ட் கேப்டனாக தடுமாற்றமாகவே செயல்பட்டார். கடந்த வருடம் வங்கதேசத்துக்கு எதிராக அவருடைய தலைமையில் இந்தியா 2 – 0 (2) என்ற கணக்கில் எளிதாக வென்றது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முதல் முறையாக இந்தியா ஒயிட் வாஸ் அவமானத் தோல்வியை சந்தித்தது.

அத்தோடு 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வந்த இந்தியாவின் உலக சாதனை வெற்றி நடை நிறைவுக்கு வந்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் போட்டியில் ரோஹித் விளையாடவில்லை. அந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

- Advertisement -

ரோஹித்துக்கு தேவையற்ற ஆதரவு:

அதற்கடுத்த போட்டிகளில் கேப்டனாக விளையாடிய ரோஹித் சர்மா மிகவும் மோசமாக பேட்டிங் செய்து இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். கடைசிப் போட்டியில் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைமை உருவானது. அப்போது ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

ஆனால் அப்போது இந்திய அணி தம்மை நீக்கவில்லை, அணிக்காக தாமாக விலகியதாக ரோஹித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தார். இந்நிலையில் அந்தப் போட்டியில் ரோகித் கேப்டனாக இல்லாமல் போனால் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவராக இருந்ததாகவே பேட்டி எடுத்த இர்ஃபான் பதான் கூறியுள்ளார். இருப்பினும் தொகுப்பாளர் என்ற முறையில் ரோஹித்துக்கு ஆதரவளித்தது குறித்து பதான் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பதான் விளக்கம்:

“ரோகித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்தவர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த வருடம் அவருடைய பேட்டிங் சராசரி வெறும் 6. அதனால் ஒருவேளை அவர் கேப்டனாக இல்லாமல் போனால் இந்திய அணியில் இருப்பதற்கு தகுதியற்றவர் என்று நாம் சொன்னோம். அதுவே உண்மையாகும். நாங்கள் தேவையின்றி ரோஹித்துக்கு அதிக ஆதரவு கொடுப்பதாக மக்கள் சொன்னார்கள்”

இதையும் படிங்க: தெரிஞ்து 2.2 கோடி.. நமக்கு தெரியாம சிஎஸ்கே இதை செஞ்சு ப்ரேவிஸை வாங்கிருக்காங்க.. அஸ்வின் பேட்டி

“இருப்பினும் நீங்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் போது யாரிடமும் தவறாக நடந்து கொள்ளக்கூடாது. அதனால் ரோகித் பேட்டி கொடுக்க வந்த போது நாங்கள் பணிவுடன் ஆதரவை காட்ட வேண்டியிருந்தது. ஏனெனில் அவர் எங்களுடைய விருந்தினர். அதனால் அவருக்கு நாங்கள் ஆதரவளிப்பதாக மக்கள் சொன்னார்கள். பலரும் அவர் பிளேயிங் லெவனில் இருக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஒருவேளை அவர் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்” என்று கூறினார்.

- Advertisement -