ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த வெற்றிக்கு 22 வயதாகும் இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 125* (56) ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்காக இளம் வயதில் சதத்தை அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற இரட்டை சாதனைகளையும் அவர் படைத்தார்.
அப்போது மற்ற ஐபிஎல் அணிகள் தவற விட்ட நிலையில் சிஎஸ்கே மட்டும் அதிர்ஷ்டம் அல்லது மாஸ்டர்ஸ்ட்ரோக்கால் பிரேவிஸை வாங்கியதாக ஏபி டீ வில்லியர்ஸ் அவர் பாராட்டினார். 2022 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிகப்பட்ச ஸ்கோர் அடித்து சாதனை படைத்த அவரை மும்பை 3 கோடிக்கு வாங்கியது. இருப்பினும் மும்பை அணியில் தொடர்ச்சியாக அசத்தத் தவறியதால் ப்ரேவிஸ் கழற்றி விடப்பட்டார்.
தெரிஞ்சது 2.20 கோடி:
கடந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே உட்பட எந்த அணியும் அவரை வாங்கவில்லை. இருப்பினும் 2.20 கோடிக்கு வாங்கப்பட்ட குர்ஜப்நீத் சிங் காயத்தால் விலகிய போது தேவால்ட் ப்ரேவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கே கிடைத்த வாய்ப்பில் வெளுத்து வாங்கிய ப்ரேவிஸ் தன்னை சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தினார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணி வெளியுலகிற்கு தெரிந்து 2.20 கோடிகளுக்கு ப்ரேவிஸை வாங்கியுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆனால் வெளியுலகத்திற்கு தெரியாமல் பல கோடிகளை கொடுத்ததாலேயே ப்ரேவிஸ் சிஎஸ்கே அணிக்கு விளையாட சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு ப்ரேவிஸ் பற்றி ஒன்றை சொல்கிறேன்”
அஸ்வின் பகிர்ந்த பின்னணி:
“கடந்த ஐபிஎல் தொடரில் அவர் சிஎஸ்கே அணியுடன் சிறந்த நேரத்தைக் கொண்டிருந்தார். உண்மையில் அவரை வாங்குவதற்கு சில அணிகள் பேச்சுவார்த்தை நடத்தின. இருப்பினும் அவருடைய விலைமதிப்பு காரணமாக அணிகள் அவரை வாங்காமல் விட்டன. சிஎஸ்கே அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது அவருக்கு அடிப்படை விலைத்தொகையே சம்பளமாக கொடுக்கப்பட்டது”
இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ரா ஆசிய கோப்பை தொடர்ல ஆடுவாரு.. ஆனா ஒரு கண்டிஷன் – வெளியான தகவல்
“ஆனால் நீங்கள் வீரரின் ஏஜெண்டிடம் பேசும் போது, அந்த வீரர் எனக்கு இவ்வளவு எக்ஸ்ட்ரா பணத்தைக் கொடுத்தால் வருகிறேன் என்று அணியிடம் சொல்வார். ஏனெனில் அடுத்த ஐபிஎல் தொடரில் நாம் பெரிய தொகைக்கு விலை போவோம் என்பது அந்த வீரருக்குத் தெரியும். எனவே எனக்கு நல்ல பணத்தை கொடுங்கள். இல்லையேல் அடுத்த வருடம் நான் இன்னும் அதிக பணத்திற்கு வேறு அணிக்காக செல்வேன் என்பதே ப்ரேவிஸ் கருத்தாகும். சிஎஸ்கே அதற்கு தயாராக இருந்ததால் ப்ரேவிஸ் அங்கே வந்தார். அவரது உதவியுடன் 2வது பகுதியில் சிஎஸ்கே வலுவான சேர்க்கையை உருவாக்கியது. 2026 ஐபிஎல் ஏலத்துக்கு சிஎஸ்கே 30 கோடியுடன் செல்லும்” என்று கூறினார்.



