
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. அதிலும் கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா மிராக்கள் வெற்றி பெற்றது. அந்த வெற்றியில் வெற்றியில் வீச்சுத் துறையில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
உண்மையில் ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுப்பார் என்பதே பலருடைய கணிப்பாக இருந்தது. இருப்பினும் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ள அவர் காயத்தைத் தவிர்ப்பதற்காக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல 3 போட்டிகளில் விளையாடிய பும்ரா 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஆனாலும் அவர் விளையாடிய போட்டிகளில் இந்தியா வெற்றி காணவில்லை. மறுபுறம் சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட இதர பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை காப்பாற்றினார்கள். இந்நிலையில் இங்கிலாந்தில் ஜஸ்ப்ரித் பும்ரா எதிர்பார்ப்பு நிகராக விளையாடாமல் 10க்கு 6 மதிப்பெண்களைக் கொடுக்கும் அளவுக்கே செயல்பட்டதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “பும்ரா 10க்கு 6 மதிப்பெண்களை பெறுவார். ஏனெனில் நீங்கள் சீனியர் வீரர்களாக இருக்கும் போது வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறுப்பு காத்திருக்கும். அவர் 3 போட்டிகளில் விளையாடினார், இந்தியா அப்போட்டிகளில் வெல்லவில்லை. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் 2வது இன்னிங்ஸில் 371 ரன்களை கட்டுப்படுத்தும் போது ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை”
“அது போன்ற முக்கியமான நேரங்களில் உங்களுடைய முதன்மை மேட்ச் வின்னர் முன்னே வந்து அழுத்தத்தை உண்டாக்கி வெற்றிக்கான வழியைக் கண்டறிய வேண்டும். ஆனால் முதல் போட்டியில் அவர் அதைச் செய்ததாக தெரியவில்லை. அதனாலேயே இங்கிலாந்து எளிதாக சேசிங் செய்தது. பும்ரா விக்கெட் எடுக்காதது ஆச்சரியமாக அமைந்தது”
“சில நேரங்களில் ஸ்பெல்லின் 6வது ஓவர் வீச வேண்டிய நிலை உருவானது. குறிப்பாக லார்ட்ஸ் போட்டியில் ரூட் களமிறங்கிய போது 6வது ஓவரை வீச வேண்டிய நிலைமை வந்தது. இத்தனைக்கும் ரூட்டை 11 முறை பும்ரா அவுட்டாக்கியுள்ளார். ஆனால் அப்போட்டியில் ரூட் களமிறங்கியதும் வீச வேண்டிய 6வது ஓவரை பும்ரா வீசவில்லை. அவருக்கு விஷயங்களை தேர்வு செய்யும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நான் எதிரானவன்”
இதையும் படிங்க: தற்போதைய கிரிக்கெட் உலகில் கே.எல் ராகுல் தான் இந்த விடயத்தில் பெஸ்ட் – புகழ்ந்து தள்ளிய மொயின் அலி
“லார்ட்ஸ் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் தனது பெயரைக் கௌரவ பலகையில் பொறித்தார். ஆனால் நீங்கள் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் போது நம்பர் ஒன் செயல்பாடுகளை எதிர்பார்ப்பீர்கள். இருப்பினும் பும்ரா அந்த எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை” எனக் கூறினார்.