தற்போதைய கிரிக்கெட் உலகில் கே.எல் ராகுல் தான் இந்த விடயத்தில் பெஸ்ட் – புகழ்ந்து தள்ளிய மொயின் அலி

Moeen Ali and KL Rahul
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி இரண்டு சதம் மற்றும் இரண்டு அரைசதம் என 532 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இரண்டாவது இந்திய துவக்க வீரராக ஒரு டெஸ்ட் தொடரில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த துவக்க வீரராக சாதனை நிகழ்த்தினார்.

கே.எல் ராகுலை பாராட்டிய மொயின் அலி :

இந்த தொடரும் முழுவதுமே இந்திய அணி சார்பாக பல்வேறு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் போட்டியின் துவக்கத்தில் சவாலான ஆடுகளங்களில் அற்புதமான, முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் ஒவ்வொரு போட்டியிலும் நல்ல துவக்கத்தை கொடுத்திருந்தார். இதன் காரணமாக அவரது இந்த செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது.

- Advertisement -

அதோடு இன்னும் சில ஆண்டுகளுக்கு கே.எல் ராகுல் தான் நிரந்தர துவக்க வீரர் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் தான் தற்போதைய உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்றும் அவர் துவக்க வீரருக்கான சரியான தேர்வு என்றும் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கே.எல் ராகுல் துவக்க வீரராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். பலருக்கும் கே.எல் ராகுலின் திறமை இதுவரை புரியவில்லை. உண்மையிலேயே அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். இங்கிலாந்து தொடரில் அவர் கொடுத்த துவக்கம் இந்திய அணிக்கு பெருமளவில் உதவியுள்ளது. இந்த தொடரில் அவர் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

சுப்மன் கில் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து சிறப்பான பேட்டிங் டெக்னிக்கை வெளிக்காட்டி இருந்தாலும் அவரைவிட கே.எல் ராகுலின் ரோல் தான் இந்த தொடரில் முக்கியமானதாக கருதுகிறேன். அதுமட்டுமின்றி இந்த தொடரில் கே.எல் ராகுல் விளையாடிய விதம் உண்மையிலேயே மிகச் சிறப்பான ஒன்று. அதனால்தான் அவரை தற்போதைய உலகின் சிறந்த வீரராக கருதுகிறேன்.

இதையும் படிங்க : ரோஹித்தின் வார்த்தைகளால் தான் ஜெய்ஸ்வால் தனது முடிவை வாபஸ் பெற்றார் – மும்பை நிர்வாகி வெளியிட்ட தகவல்

இங்கிலாந்து மண்ணில் துவக்க வீரராக விளையாடுவது சாதாரண விடயம் கிடையாது. ஆனால் அதனை மிகச் சிறப்பாக கையாண்ட அவர் தனது முதிச்சியான ஆட்டத்தை இந்த தொடரில் காண்பித்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் அவர் அடித்த சதம் வரலாற்றிலும் இடம் பிடித்துள்ளது என மொயின் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement