- Advertisement -
ஐ.பி.எல்

தோற்றாலும் 5 வருங்கால ஸ்டார்கள் கிடைச்சுருக்காங்க – சிஎஸ்கே ரசிகர்களுக்கு தெம்பை தெளிக்கும் முன்னாள் வீரர்

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது கோப்பையை சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆரம்பத்திலேயே 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் காயத்தால் விலகியது, தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக 4 கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி தேவையின்றி கேப்டன் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தது மேலும் பின்னடைவை கொடுத்தது. ஏனெனில் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத அவர் தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்த அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பாதி பறிபோனது.

எஞ்சிய போட்டிகளிலும் ஒருசில தடுமாற்ற வெற்றிகளைப் பெற்ற அந்த அணியை வழிநடத்திய ஜடேஜா பேட்டிங் பவுலிங் என மொத்தமாக கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தடுமாறியதால் அந்த பதவியே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே வழங்கி அடுத்த போட்டியிலேயே காயத்தால் மொத்தமாக விலகினார். அந்த நிலைமையில் பரம எதிரியான மும்பையிடம் 97 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்த சென்னை 2020க்கு பின் மீண்டும் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

எல்லாமே சொதப்பல்:
அந்த தொடர் தோல்விகளுக்கு மத்தியில் கேப்டனாக தோனி திரும்பியது சென்னை ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்தது. ஆனாலும் பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை பதிவு செய்த சென்னை புள்ளி பட்டியலில் 9-வது இடத்தை பிடித்து வீட்டுக்கு கிளம்பியது. மொத்தத்தில் தீபக் சஹர், ஆடம் மில்னே போன்ற முக்கிய வீரர்களின் எதிர்பாராத காயங்கள், எம்எஸ் தோனியின் தேவையற்ற கேப்டன்ஷிப் மாற்றம் முடிவு, சுமாரான பேட்டிங் மோசமான பவுலிங் என இந்த வருடம் எதுவுமே சரிவர அமையாத சென்னையின் 5-வது கோப்பை கனவு அடுத்த 2023 சீசனுக்கு சென்றுள்ளது.

கேப்டன் தோனி:
2023 சீசன் சென்னைக்கு மிகச்சிறப்பாக இருக்கும் என்பதற்கு இப்போதே ஒரு அறிகுறியாக அடுத்த வருடம் மீண்டும் சென்னைக்காக விளையாடுவேன் என்று நேற்றைய போட்டியில் எம்எஸ் தோனி அறிவித்தது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் தன்னை தல என்று மனதில் வைத்தும் கொண்டாடும் ரசிகர்களுக்காக சேப்பாக்கத்தில் நிச்சயமாக விளையாடுவேன் என தெரிவித்தது ரசிகர்களை நிம்மதியடைய வைத்தது. ஏனெனில் இந்த வருடம் கூட இதே சுமாரான சென்னை அணி ஜடேஜா தலைமையில் 8 போட்டிகளில் பெற்ற 2 வெற்றிகளை அவர் தலைமையில் 6 போட்டிகளில் பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் வெற்றிகரமான அணிகளுக்கும் தோல்வி என்பது சகஜம் என்று தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் அடுத்த வருடம் சென்னைக்காக 5 சூப்பர் ஸ்டார் வீரர்கள் கிடைத்துள்ளதால் கவலைப்பட தேவையில்லை என்று அந்த அணி ரசிகர்களின் நம்பிக்கையை எகிற வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அவர் கூறும் 5 வீரர்களின் இந்த வருட செயல்பாட்டு பற்றி பார்ப்போம்:

1. முகேஷ் சவுத்ரி: தீபக் சஹர் இல்லாத நிலையில் வேறு வழியின்றி இளம் பவுலர் முகேஷ் சவுதரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் ஆரம்பகட்ட போட்டிகளில் சுமாராக செயல்பட்ட அவர் அதன்பின் அற்புதமாக பந்துவீசி 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்து ஐபிஎல் 2022 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத பவுலராக அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதிலும் சஹர் போலவே பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்யும் திறமை பெற்ற இவர் மும்பைக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா, இசன் கிசன் ஆகியோரை ஒரே ஓவரில் டக் அவுட் செய்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

2. டேவோன் கான்வே: நியூசிலாந்தின் தொடக்க வீரரான இவருக்கு முதல் போட்டியில் வாய்ப்பளித்து சொதப்பினார் என்பதற்காக பெஞ்சில் அமர வைத்த சென்னை நிர்வாகம் காலம் கடந்தபின் மீண்டும் வாய்ப்பளித்தது.

- Advertisement -

அதை கச்சிதமாகப் பிடித்த அவர் ருதுராஜ் உடன் ஒரு போட்டியில் 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 252 ரன்களை எடுத்து அடுத்த வருடம் தொடக்க வீரராக களமிறங்க தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

3. மதீஸா பதிரனா: இலங்கையின் ஜூனியர் மலிங்கா என்று அழைக்கப்படும் இளம் வீரரான இவர் கடைசி 2 போட்டிகளில் பெற்ற வாய்ப்பில் மலிங்காவை போலவே பந்துவீசி அனைவரின் பாராட்டுகளை அள்ளினார். 2 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் இவர் அடுத்த வருடம் நிச்சயம் விளையாடுவார் என்று ஏற்கனவே தோனி தெரிவித்துள்ளார்.

4. மகேஷ் தீக்சனா: இந்த வருடம் ஜடேஜா பார்மின்றி தவித்த போது அதை சரிசெய்யும் வகையில் அற்புதமாக சுழலில் ஜாலம் நிகழ்த்திய மற்றொரு இலங்கை இளம் வீரரான இவர் 9 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை எடுத்து அசத்தலாக செயல்பட்டார். அதிலும் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்களை பறக்கவிட துடிக்கும் கடைசி கட்ட ஓவர்களிலும் துல்லியமாக பந்துவீசிய இவரும் அடுத்த வருடம் கலக்குவார் என்று நம்பலாம்.

இதையும் படிங்க : சென்னைக்காக வெறும் 2 போட்டியில் விளையாடிய அதிர்ஷ்டம் – நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற இளம் வீரர்

5. சிமர்ஜீத் சிங்: 24 வயது நிரம்பிய இந்த இளம் பவுலரும் கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பில் 6 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை 7.66 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து நிறைய முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இவரும் அடுத்த வருடம் சென்னை அணியில் நிச்சயமாக விளையாடுவார் என நம்பலாம்.

- Advertisement -
Published by