சென்னைக்காக வெறும் 2 போட்டியில் விளையாடிய அதிர்ஷ்டம் – நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற இளம் வீரர்

CSK Matheesa Pathirana
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்து சுற்றுடன் வெளியேறியது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. தீபக் சஹர் போன்ற முக்கிய வீரர் காயத்தால் ஆரம்பத்திலேயே விலகியது, தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக கேப்டன்சிப் பொறுப்பை அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜாவிடம் கொடுத்து அதில் அவர் சொதப்பி மீண்டும் பெற்றுக் கொண்டது என தோனி எடுத்த தவறான முடிவு, தொடரின் இடையே ஆடம் மில்னே – ஜடேஜா ஆகியோர் காயத்தால் விலகியது போன்ற அம்சங்கள் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

அதேபோல் அந்த வீரர்களின் இடத்தை சரிசெய்ய வேண்டிய ருதுராஜ் உட்பட நிறைய முக்கிய வீரர்கள் பொறுப்பில்லாமல் சுமாராக பேட்டிங் செய்தது, கிறிஸ் ஜோர்டான் போன்ற பவுலர்கள் வள்ளலாக மாறி ரன்களை வாரி வழங்கியது உட்பட களத்தில் பேட்டிங் பவுலிங்கில் மொத்தமாக சொதப்பியதும் அந்த அணியின் தோல்விக்கு காரணமானது. இருப்பினும் 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் அரைசதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பாரமில் திணறி வந்த கேப்டன் தோனி இந்த வருடம் முதல் போட்டியிலேயே ஓரளவு நல்ல பார்முக்கு திரும்பியது ஆறுதலாக அமைந்தது.

- Advertisement -

இளம் வீரர்கள்:
அதைவிட ஏற்கனவே கூறியது போல் தன் மீது பாசம் வைத்துள்ள சென்னை ரசிகர்களுக்காக சேப்பாக்கத்தில் தனது வாழ்நாளின் கடைசி போட்டியில் விளையாடும் எண்ணத்தில் ஐபிஎல் 2023 தொடரில் நிச்சயமாக மீண்டும் விளையாடுவேன் என்று ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியின் முடிவில் கேப்டன் எம்எஸ் தோனி அறிவித்தது அந்த அணி ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது. மேலும் இந்த வருடம் தோல்வி அடைந்தாலும் கூட முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங் போன்ற இளம் வீரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அரைகுறை வாய்ப்பிலும் அசத்தலாக செயல்பட்டது அந்த அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

அதிலும் பந்துவீச்சில் ஜடேஜா தடுமாறிய போது வாய்ப்பு பெற்ற இலங்கை இளம் சுழல்பந்து வீச்சாளர் மகீஸ் தீக்சனா 9 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதேப்போல் கடைசி 2 போட்டியில் வாய்ப்பு பெற்ற இலங்கையின் 19 வயது வீரர் மதீஸா பதிரனா அந்த நாட்டின் ஜாம்பவான் மலிங்காவை போலே பந்துவீசி அனைவரின் பாராட்டுகளைப் பெற்று ஜூனியர் மலிங்கா என்று பெயரை வாங்கியுள்ளார். இதனால் மேற்குறிப்பிட்ட இளம் வீரர்கள் அடுத்த வருடம் முழுமையான வாய்ப்பு பெறுவார்கள் என்பதால் 2023இல் சென்னை வெற்றி பாதைக்கு திரும்பும் என அந்த அணி ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

இலங்கையில் வாய்ப்பு:
இந்நிலையில் சென்னை அணிக்காக வெறும் 2 போட்டியில் விளையாடி அசத்திய மதீசா பதிரானாவுக்கு இலங்கை அணியில் அதிர்ஷ்டமாக வாய்ப்பு தேடி வந்துள்ளது. 2020, 2022 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் மலிங்காவை போலவே பந்து வீசி அவரை போலவே எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்த அவர் அதன் காரணமாக சென்னை அணியில் விளையாடி அதைவிட பெரிய கவனத்தை கவனத்தை பெற்று பிரபலம் அடைந்துள்ளார்.

அந்த நிலைமையில் வரும் ஜூன் மாதம் தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை பங்கேற்கிறது. அதில் வரும் வரும் ஜூன் 7, 8, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் அவரின் பெயர் முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னைக்காக அசத்திய மற்றொரு இளம் சுழல்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சனா நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இவர்களுடன் இதே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அசத்திய பனுக்கா ராஜபக்சா, பெங்களூர் அணிக்காக 24 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய வணிந்து ஹஸரங்கா, லக்னோ அணிக்காக அசத்தலாக பந்துவீசிய துஷ்மந்தா சமீரா ஆகியோரும் இந்த இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : சும்மா ஒன்னும் உலகசாதனை படைக்கல, அதை செய்ய கடுமையாக உழைத்தேன் – பின்னணியை பகிரும் சோயப் அக்தர்

அந்த அணி இதோ:
தசுன் ஷானகா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, பதும் நிசாங்கா, குஷால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பனுக்கா ராஜபக்சா, ஆசின் பண்டாரா, நிரோஷான் டிக்கவெல்லா, துணித் வெல்லலாஜ், தனஞ்சயா லக்ஷன், சஹன் ஆராச்சி, வணிந்து ஹஸரங்கா, சமிகா கருணாரட்னே லஹிரு மதுஷங்கா, ரமேஷ் மெண்டிஸ், துஷ்மந்தா சமீரா, பினுரா பெர்னாண்டோ, மதீஷா பதிரனா, நுவான் துஷாரா, கசுன் ரஜிதா, நிபுன் மலிங்கா, லஹிரு குமாரா, ஜெபிரி வண்டெர்சய், மஹீஸ் தீக்ஷனா, பிரவீன் ஜெயவிக்ரமா, லக்ஷன் சண்டகன்

Advertisement