சும்மா ஒன்னும் உலகசாதனை படைக்கல, அதை செய்ய கடுமையாக உழைத்தேன் – பின்னணியை பகிரும் சோயப் அக்தர்

Akhtar
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது அசுர வேக பந்துகளால் 90களின் இறுதியிலும் 2000த்தின் துவக்கத்திலும் உலகின் பல தரமான பேட்ஸ்மேன்களையும் அச்சுறுத்தியவர். சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங் போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் தனது வேகத்தால் திணறடித்த அவர் பலமுறை அவர்களை வெற்றிகரமாக அவுட் செய்து தனது அணிக்கு வெற்றிகளைத் தேடி கொடுத்துள்ளார்.

akhtar

- Advertisement -

அவர் விளையாடிய காலத்தில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத், பிரட் லீ போன்றவர்களை காட்டிலும் அதிக வேகத்தில் பந்து வீசக் கூடியவராக இருந்த அவரை அதன் காரணமாகவே ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். சொல்லப்போனால் காயமடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் அவர் வீசிய வேகத்திற்கு ஈடாக இப்போதுள்ள பவுலர்கள் பெரும்பாலும் யாரும் அவ்வளவு வேகத்தில் வீசுவதே கிடையாது.

உலகசாதனை:
சச்சின் டெண்டுல்கர் போன்ற பேட்ஸ்மேன்கள் மலைபோல ரன்களை குவித்து அசால்டாக சதங்களை அடித்து உலக சாதனை படைத்தனர். அதேபோல இலங்கையின் முரளிதரன் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே போன்றவர்கள் தங்களது மாயாஜால சுழலில் விக்கெட்டுகளை கொத்துக் கொத்தாக அள்ளி உலக சாதனை படைத்தனர். அந்த வகையில் ஒரு வேகப்பந்து வீச்சாளரான தன்னுடைய பலம் வேகம் என்பதை தெரிந்து வைத்திருந்த அக்தர் முடிந்த அளவுக்கு வேகமாக வீசி உலகிலேயே சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்தார்.

Akhtar

கடந்த பிப்ரவரி 22, 2003இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் பேட்ஸ்மேன் நைட்க்கு எதிராக 161.3 கி.மீ வேகத்தில் அவர் வீசிய பந்து தான் உலகிலேயே அதிவேகத்தில் வீசப்பட்ட பந்தாக ஐசிசி’யால் அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனையாக படைக்கப்பட்டது. அதன் பின் சுமார் 20 வருடங்கள் கடந்தும் கூட இன்னும் அந்த சாதனை உடைக்கப்படாமல் இருப்பதே அவரின் வேகத்துக்கான சிறந்த சான்றாகும்.

- Advertisement -

கடினமாக உழைத்தேன்:
அந்த சாதனையை தற்போது ஐபிஎல் தொடரில் 22 வயதிலேயே தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் வீசி உச்சபட்சமாக 157 கி.மீ வேகத்தில் வீசிய இளம் இந்திய பவுலர் உம்ரான் மாலிக் உடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக அனைவரும் கருதுகின்றனர். இதுவரை இந்தியாவிற்காக விளையாடாத அவர் நீண்ட காலம் காயமின்றி விளையாடி தனது சாதனையை உடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று சோயப் அக்தர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதற்கு கடினமான முயற்சியும் உழைப்பும் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அவர் 161.3 கி.மீ வேகப் பந்தை வீசுவதற்கு கடினமாக உழைத்து மேற்கொண்ட பயிற்சிகளை தற்போது விவரித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “155 கி.மீ வேகத்தை நீங்கள் தொடும் போது எஞ்சிய 5 கி.மீ மேகமும் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. இருப்பினும் அதை உங்களுக்கு பந்துவீச்சில் சேர்க்க ஸ்பெஷலான பயிற்சிகள் தேவை படுகிறது. அந்த வகையில் நான் 100 மைல் வேகத்தில் தொடுவதற்கு முன்பாக 157 – 158 கி.மீ வேகத்தை தொட்டாலும் 160 தொட முடியவில்லை. அதனால் ஏன் என்னால் அதைத் தொட முடியவில்லை என்று ஆச்சரியமடைந்தேன்.

- Advertisement -

“அதன்பின் மிகவும் கனமான டயர்களை வைத்து பயிற்சி செய்து எனக்கு அது லேசாக இருப்பதாக தோன்றியது. அதனால் சிறிய அளவிலான வாகனங்களை எனது தோளில் கட்டி இழுத்தேன். இஸ்லாமாபாத் நகரில் மக்கள் கூட்டம் குறைவு என்பதால் நிறைய இரவு நேரங்களில் வாகனங்களை இழுத்து பயிற்சி எடுத்தேன். அதுவும் சிறியதாக இருப்பதாக உணர்ந்த நான் அதன்பின் டிராக்டரை 4 – 5 மைல் தொலைவுக்கு இழுத்துப் பயிற்சி எடுத்தேன்”

ShoaibAkhtar

“அதன்பின் 26 யார்ட் களத்தில் பந்து வீசிய போது எனது வேகம் 142 – 143 என்று குறைந்தது. இருப்பினும் 150 வேகத்தில் வீச வேண்டும் என முயற்சித்த எனது தசைகள் சிறந்த நிலையில் உருவாகின. அதன்பின் பழைய தேய்ந்துபோன பந்துகளை உபயோகப்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க பயிற்சி எடுத்தேன். அதுபோல் ஒரு சில மாதங்கள் பயிற்சி எடுத்த பின் 150 வேகத்தை தொட்டேன். 2003 உலக கோப்பையின் போது வலைப்பயிற்சியில் எனது பந்தை எதிர்கொண்ட எங்கள் நாட்டுப் பேட்ஸ்மேன்கள் “இப்படி பந்து வீசினால் எங்களைக் கொன்று விடுவாய், இவ்வளவு வேகத்தில் வீசுவதற்கு என்ன செய்தாய்” என்று கேட்டனர். அதற்கு நான் 100 மைல் வேகத்தை தொடுவதற்காக கடுமையான பயிற்சி எடுத்ததாக தெரிவித்தேன்”

இதையும் படிங்க : மலிங்கா உட்பட நீங்க கேட்ட இளம்படை கிடைச்சுடுச்சு, அடுத்த வருடம் கம்பேக் குடுப்போம் – தோனி நம்பிக்கை

“மேலும் உலகக் கோப்பையின் போது வேகமான பந்து சாதனையை உடைப்பேன் என்று எனது அணி வீரர்களான சக்லைன் முஷ்டக், அசார் மகமூது ஆகியோரிடம் தெரிவித்தேன். அந்த வகையில் 161.3 கி.மீ வேகத்தை தொட்ட பின் அதை விட வேகமாக பந்து வீச முடியும் என்று நான் நினைத்தேன். ஆனால் எனது உடலில் நிறைய வலிகள் ஏற்பட்டதால் இதே வேகத்தில் வீசினால் நான் காயமடைந்து உலக கோப்பையில் இருந்து வெளியேறி விடுவேன் என்று நினைத்ததால் வேகத்தை குறைத்து கொண்டேன்” என்று கூறினார்.

Advertisement